காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்... வாக்குறுதிகளை வாரி வழங்கிய மல்லிகார்ஜூன கார்கே!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்... வாக்குறுதிகளை வாரி வழங்கிய மல்லிகார்ஜூன கார்கே!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற இருப்பதாக அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய பிரதேசத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்ட பேரகை உறுப்பினரக்ளின் பதவி காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் அல்ல அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்ப்படுகிறது. இந்நிலையில், அனைத்துக் கட்சகளும் மக்களை வாக்குகளை ஈர்க்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதந்தோரும் ஆயிரத்து 500 ரூபாய் அளிக்கப்படும் என மத்தியப்பிரதேசத்தில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

நேற்று மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், வீட்டு உபயோக சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com