தமிழகத்தின் எதிர்ப்பை கர்நாடக சட்டரீதியாக எதிர்கொள்ளும்... அமைச்சர் பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை கர்நாடகம் சட்டரீதியாக எதிர்கொள்ளும் என அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 
தமிழகத்தின் எதிர்ப்பை கர்நாடக சட்டரீதியாக எதிர்கொள்ளும்... அமைச்சர் பசவராஜ் பொம்மை

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அணை கட்டுவதை கைவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு நீண்ட காலமாக தகராறு செய்து வருவதாகவும், தீர்ப்பாயம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவு தெளிவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கிவிட்டதாக கூறிய அவர், மேகதாது அணையை தடுப்பதற்கான தமிழக அரசுஅரசின் முயற்சியை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை திட்டம் இரு மாநிலங்களுக்கும் உதவும் எனவும், தமிழகத்தில் மழை பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் கர்நாடகாவில் சேமிக்கப்படும் நீரில் இருந்து தண்ணீர் வழங்கப்படும் எனவும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com