"சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளது" பிரதமர் மோடி!!

Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டியளித்தார். 

அப்போது சந்திரயான் 3 திட்டத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்திய அவர், ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் முன்னேற்றத்தை உலக நாடுகள் போற்றுவதாகவும் உலகின் தென் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த குரலாக இந்தியா செயல்படுவதாகவும் கூறியுள்ளார். 

கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், சுமூகமாக கூட்டத்தை நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com