எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது.....!!

எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது.....!!

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.  இதன் எதிரொலியாக, அவரது நாடாளுமன்ற பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக, அரவது அலுவலகத்தை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது.  இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாக பகுதியில் கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக  பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் ராகுல் காந்தியை தண்டித்திருக்கிறது எனவும் எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது அவர் எண்ணுகிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com