" கங்கையில் பதக்கங்களை வீசுவது போல் சென்று, எதுவும் செய்யாமல் திரும்பியது போராட்ட உக்திகளில் ஒன்று " - பிரிஜ் பூஷன்.

" கங்கையில் பதக்கங்களை வீசுவது போல் சென்று, எதுவும் செய்யாமல் திரும்பியது போராட்ட உக்திகளில் ஒன்று " - பிரிஜ் பூஷன்.

Published on

மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் நீது புலியால் குற்றசாட்டு கூறி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தை மேற்கொண்டு வருகைன்றனர். நிலையில் தற்போது வரை பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படாத நிலையில், புதிய பாராளுமன்ற கட்டடத்தின் திறப்புவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. அரசின் கவனத்தை ஈர்க்க மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்ற கட்டடம் நோக்கி அமைதி பேரணியாக சென்றனர். அப்போது புதிய பாராளுமன்ற கட்டட திருப்பு விழா நிகழ்வின்போது எந்த வித இடையூறும் நீர்ந்துவிட கூடாது என்று, பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

இந்நிலையில் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யப்படாததாலும்,  தங்களுக்கான நியாயம் கிடைக்காமல் இருப்பதாலும், அதிருப்தியடைந்த மல்யுத்த வீரர்கள், தாங்கள் அட்டிற்காக அயராது உழைத்து ஆசையாக வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக அறிவித்தனர். 

அதன்படி அவர்கள் கங்கை ஆற்றில் தங்களது பதக்கங்களை வீசுவதற்காக சென்றனர்.  அப்போது ஹரித்துவார் மக்கள் அவர்களை சமாதானப்படுத்தி, அவர்கள் கடுமையாக  போராடி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசினால் மதிப்பிற்குரிய இரண்டு பதக்கங்களை நாடு இழந்து விடும் எனக்கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறி அந்த முடிவை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் மல்யுத்த வீரர்கள் கண்களது முடிவை கைவிட்டனர். 

தற்போது அவர்களின் இந்த முடிவின் மாற்றத்தை பாஜக எம்பி. பிரிஜ் பூஷன் சிங் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " கங்கையில் பதக்கங்களை வீசுவது போல் சென்று, எதுவும் செய்யாமல் திரும்பியது போராட்ட உக்திகளில் ஒன்று ", என  தெரிவித்துள்ளார். மேலும், இந்நிலையில் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும், குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் டெல்லி போலீசார் தன்னை கைது செய்திருப்பர் எனவும் பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  புகார் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும், குற்றச்சாட்டு குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமில்லாத விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

அதோடு, மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும், அவர்களின் பாதுகாப்பு குறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு மீண்டும் விசாரிக்கும் எனவும் கூறியுள்ளது. இந்திய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய 45 நாட்கள் கெடு விதித்துள்ள நிலையில், தவறினால் இடைநீக்கம் செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com