வாக்குப்பதிவில் சாதனை புரிய அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!!

வாக்குப்பதிவில் சாதனை புரிய அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!!

திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு 3,328 வாக்குச் சாவடிகளில் தொடங்கியது.  இதில் 1,100 முக்கியமான மற்றும் 28 மிக முக்கியமான வாக்குச் சாவடிகள் உயர்மட்ட பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  காலை 11 மணி நிலவரப்படி 32.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வாக்காளர்கள்:

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 28.14 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில் 14,15,233 ஆண் வாக்காளர்களும், 13,99,289 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

அழைப்பு விடுத்த மோடி:

”திரிபுரா மக்கள் சாதனைப்புரியும் வகையிலான எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்.  இளைஞர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்துமாறு நான் சிறப்பான அழைப்பு விடுக்கிறேன்.” என பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com