நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 8 - வது நாளாக முடக்கம்...!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 8 - வது நாளாக முடக்கம்...!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் எட்டாவது நாளாக இன்றும் முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அமர்வு தொடங்கிய நாளிலிருந்தே அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 

இந்நிலையில், எட்டாவது நாளான இன்று காலை அவை கூடியதும் வழக்கம்போல், அதானி நிறுவன முறைகேடு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி, இரு அவைகளிலும்  எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டன. இதேபோல், இந்தியாவின் ஜனநாயகம் குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் மக்களவை கூடிய போது அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளும், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக பாஜக உறுப்பினர்களூம் அமளியில் ஈடுபட்டதால் மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்கவையிலும் அமளி தொடர்ந்ததால் 24 ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com