இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அனுமதிக்கப்படாது- அமித் ஷா

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அனுமதிக்கப்படாது- அமித் ஷா
Published on: 
Updated on: 
1 min read

கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி வழங்கியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா புகார் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அமித் ஷா, ஹரியானாவில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com