தொடங்கியது சமூகநீதி மாநாடு

தொடங்கியது சமூகநீதி மாநாடு
Published on
Updated on
1 min read

டெல்லியில்   தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

இதில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் டி.ராஜா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் கட்சி தலைவர் பாரூக் அப்துல்லா, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். 

தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com