
உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் தெருவில் நடந்து செல்லும் 5 வயது சிறுவனை குரங்குகள் துரத்திச் சென்று கடித்துள்ளன. இந்த நிலையில், சிறுவன் பயத்தில் அலறி சத்தமிட்டதும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரட்டியதை அடுத்து குரங்குகள் ஓடிவிட்டன. இதனையடுத்து, சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.