அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி குறித்து அமித் ஷா கூறியதென்ன?!!

அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி குறித்து அமித் ஷா கூறியதென்ன?!!

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

ஆங்கில செய்தித்தாள் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமித்ஷா, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார்.  

மேலும் மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல என தெரிவித்த அமித்ஷா, ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி குறித்து கேள்வி கேட்டபோது தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com