கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு மூளையை உண்ணும் அமீபா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் அமீபா தொற்றால் ஏற்கனவே 3 பேர் மரணம் அடைந்த நிலையில் தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியே சேர்ந்த சிறுவன் அமீபா தொற்றால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் தொற்றை கட்டுபடுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.