"மணிப்பூர் விவகாரம், திட்டமிடப்பட்ட சதி?", மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்!

"மணிப்பூர் விவகாரம், திட்டமிடப்பட்ட சதி?", மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்!
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் அடிக்கடி வன்முறை நிலவி வரும் நிலையில், அந்நாட்டு முதல்வர் பைரன் சிங், தற்போது நிலவி வரும் சூழ்நிலை, முன்பே திட்டமிடப்பட்ட சதி போலிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே, பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கலவரம் வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் முதலமைச்சா் பைரன் சிங் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், மியான்மர் நாட்டுடன் மணிப்பூர் தனது எல்லையை பகிர்கிறது. சீனாவும் அருகே உள்ளது. நமது எல்லையின் 398 கிலோ மீட்டா் தொலைவு பகுதியானது காவல் இல்லாமல் உள்ளதாக, தொிவித்துள்ளார்.

மேலும், நம்முடைய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், ஒரு வலிமையான மற்றும் விரிவான பலத்த பாதுகாப்பு போடப்பட்டாலும், அதுபோன்ற பரந்த பகுதியை காவல் காக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தொடா்ந்து பேசிய அவா், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, இது முன்பே திட்டமிடப்பட்ட சதி என்பது போன்று காணப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்பது மறுக்கவோ அல்லது உறுதியாக கூறவோ முடியாத நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மணிப்பூருக்கு மத்திய அரசு  செய்ததை மாநில அரசு ஆறு ஆண்டுகளில் செய்ததாகவும், ஒரு சந்தையில் ஒரு சிறு குழுவினர் இழிவாகப் பேசியதால் ராஜினாமா முடிவு செய்ததாகவும் மக்கள் ஆதரவைப் பார்த்து ராஜினாமா முடிவு தவறு என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com