யானைத் தந்தம் கடத்தல்; 4 பேர் கைது!

யானைத் தந்தம் கடத்தல்; 4 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் மர்ம நபர்கள் சிலர் யானை தந்தங்களை கடத்தி அதை விற்பதற்காக விலை பேசி வருகின்றனர் என கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் ரவி தலைமையில் வனத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, நாகரசம்பட்டியில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியே 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வனத்துறையினரை பார்த்ததும் வேகமாக சென்றுள்ளனர். அவர்களை துரத்தி பிடித்த வனத்துறையினர் அவர்கள் பையை சோதனை செய்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையில் 2 யானை தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்களிடம் இருந்து தந்தங்கள் கைப்பற்றப்பட்டு, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், செந்தில், கந்தன், நாகப்பன் ஆகிய 4 பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க ஆஜர் படுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த யானை தந்தங்கள் இவர்களிடம் எப்படி வந்தது, இந்த தங்கங்களை யாருக்கு விலை பேசினர் என்பது குறித்து தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:இந்திய வரைபடத்தில் தொலைந்து போன மீனவ கிராமங்கள் ;"மீண்டும் சேர்க்கப்படும்" அமைச்சர் ரகுபதி உறுதி!