இந்தியாவில் அறிமுகமான "ஏப்ரிலியா".. அதுவும் Limited Edition மட்டுமே!

அதன் தனித்துவமான தோற்றத்துக்காகவும், சக்திவாய்ந்த செயல்பாட்டிற்காகவும் கவனத்தை ஈர்த்துள்ளது..
இந்தியாவில் அறிமுகமான "ஏப்ரிலியா".. அதுவும் Limited Edition மட்டுமே!
Published on
Updated on
1 min read

ஏப்ரிலியா நிறுவனம் தனது புகழ்பெற்ற மோட்டோஜிபி (MotoGP) பைக்குகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஏப்ரிலியா எஸ்ஆர்-ஜிபி ரெப்ளிகா 175 எச்.பி-இ' (Aprilia SR-GP Replica 175 hp-e) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், அதன் தனித்துவமான தோற்றத்துக்காகவும், சக்திவாய்ந்த செயல்பாட்டிற்காகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாடல், limited edition-ல் மட்டுமே கிடைப்பதால், இது வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலை மற்றும் வடிவமைப்பு

புதிய ஏப்ரிலியா எஸ்ஆர்-ஜிபி ரெப்ளிகா ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,22,521 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மாடலை விட சுமார் ரூ. 3,000 அதிகமாகும்.

வடிவமைப்பில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டரின் என்ஜின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள், வழக்கமான ஏப்ரிலியா எஸ்ஆர் மாடலை ஒத்ததாகவே உள்ளன. இதில் 174.7 சி.சி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 13 ஹெச்.பி சக்தியையும் (Horsepower), 14.14 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் (Nm) வெளியிடுகிறது.

ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் சக்கரங்களில் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாக உள்ளதால், இது பாதுகாப்பான அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள வசதிகள் பயணத்தை இன்னும் எளிதாக்குகின்றன.

வசதிகள்

டிஸ்ப்ளே: இதில் உள்ள 5.5-இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே (TFT Display) பயணத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் தெளிவாகக் காட்டுகிறது.

ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் எல்.இ.டி (LED) தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிறந்த ஒளியையும், நவீன தோற்றத்தையும் கொடுக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com