

தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது இயற்கையின் சிறிய ஆற்றல் பொட்டலம் என்று சொல்லலாம். நான் நினைப்பது போல வாழைப்பழம் என்பது வெறும் பழம் மட்டுமல்ல இது ஒரு சத்து நிறைந்த, மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மருந்துவ பொக்கிஷம். தினமும் ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தை உணவில் சேர்த்து வந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். ஒரு வாழைப்பழத்தில் சுமார் 350-400 மி.கி. பொட்டாசியம் உள்ளது. இது உங்கள் தினசரி கலோரிகள் தேவையில் 10-12% வரை பூர்த்தி செய்யும்.
இது இரத்த அழுத்தத்தை சீராக்கி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. அமெரிக்க இதய சங்கம் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை பரிந்துரைத்துள்ளது அதில் வாழைப்பழம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 3 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மேலும் புரோபயாடிக் தன்மை கொண்ட நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவி, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் உடலுக்கு விரைவான ஆற்றலைத் தருகின்றன. உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிட்டால் தசைப்பிடிப்பு) வராமல் தடுக்கும் பொட்டாசியம் வைட்டமின் B6 கூட்டணி உடலை உற்சாகமாக வைத்திருக்கும். எனவே விளையாட்டு வீரர்களிடையே இது மிகவும் பிரபலமான “ப்ரீ-வொர்க்அவுட்” ஸ்நாக். ஆக உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 மற்றும் டிரிப்டோபன் அமினோ அமிலம் செரோடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தம், கவலை குறைவதற்கு இது மறைமுகமாக துணைபுரிகிறது.
வாழைப்பழத்தில் உள்ள குறைந்த கலோரி (சுமார் 90-110 கலோரி), அதிக நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும் தன்மை கொண்டது. அதிக சர்க்கரை என்று பயப்பட வேண்டாம். இது இயற்கை சர்க்கரை நார்ச்சத்து காரணமாக ரத்த சர்க்கரை திடீரென உயராமல் படிப்படியாக உயர்த்தும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் C மாங்கனீஸ், மெக்னீசியம் ஆகியவை சருமத்தை பாதுகாக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
பெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்களுக்கு தினமும் 1-2 வாழைப்பழங்கள் மிகவும் பாதுகாப்பானவை. ஆனால் நீரிழிவு நோயாளிகள் அல்லது கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே அளவை முடிவு செய்ய வேண்டும். எனவே அடுத்த முறை காலை அல்லது மாலை சிற்றுண்டி உடன் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது வெறும் பழம் அல்ல... உங்கள் உடலுக்கு தினசரி கொடுக்கும் சிறிய ஆரோக்கிய ஊட்டல்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.