3,500 பணியிடங்களுக்கு விண்ணப்பம்.. இருகரம் கூப்பி வரவேற்கும் கனரா வங்கி

கனரா வங்கியின் விதிமுறைகளின்படி, உடல் மற்றும் மருத்துவத் தகுதியுடன் இருக்க வேண்டும்..
3,500 பணியிடங்களுக்கு விண்ணப்பம்.. இருகரம் கூப்பி வரவேற்கும் கனரா வங்கி
admin
Published on
Updated on
1 min read

கனரா வங்கி நாடு முழுவதும் 3,500 அப்ரென்டிஸ் (பயிற்சி) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள், கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான canarabank.com மூலம், செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

மொத்த பணியிடங்கள்: 3,500

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மட்டுமே.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 12.

விண்ணப்பக் கட்டணம்

பொது / OBC / EWS: ரூ. 500

SC / ST / மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை

வயது வரம்பு (01 செப்டம்பர் 2025 நிலவரப்படி)

குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள்

அரசு விதிகளின்படி, SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

பிரிவு வாரியான காலியிடங்கள்

பொது: 1,534

OBC: 845

EWS: 337

SC: 557

ST: 227

மொத்தம்: 3,500

தகுதிகள்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 01 ஜனவரி 2022 மற்றும் 01 செப்டம்பர் 2025 ஆகிய தேதிகளுக்கு இடையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உள்ளூர் மொழித் தேர்வு: 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளூர் மொழியைப் படித்ததாகச் சான்றளிக்கப்படாதவர்கள், உள்ளூர் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

உடல் தகுதி: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், கனரா வங்கியின் விதிமுறைகளின்படி, உடல் மற்றும் மருத்துவத் தகுதியுடன் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை (Stipend)

பயிற்சிக் காலத்தில், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இதில், கனரா வங்கி நேரடியாக ரூ. 10,500 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும். மீதமுள்ள ரூ. 4,500 அரசின் பங்களிப்பாக நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிப்பதற்கு முன் Apprenticeship portal (www.nats.education.gov.in) என்ற இணையதளத்தில் தங்கள் தகவல்களை 100% முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். மற்ற எந்த வழியிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com