ஒரே மாசத்துல உங்க தொப்பையை குறைக்கணுமா? இந்த 30 நாள் மேஜிக் டயட் பிளான் இதோ உங்களுக்காக!

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக ஒரு ஆப்பிள் அல்லது கொய்யாப்பழம் சாப்பிடலாம்...
Diet to follow to lose belly fat in 30 days
Diet to follow to lose belly fat in 30 days
Published on
Updated on
1 min read

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது பட்டினி கிடப்பதல்ல, மாறாகச் சரியான உணவைச் சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான். ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காண வேண்டுமென்றால், நீங்கள் முதலில் 'வெள்ளை' நிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது சர்க்கரை, மைதா மற்றும் அதிகப்படியான வெள்ளை அரிசி சாதத்தை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். அதற்குப் பதிலாக சிறு தானியங்கள் (தினை, வரகு, குதிரைவாலி) மற்றும் கைக்குத்தல் அரிசியைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காலை உணவாக இட்லி, தோசைக்குப் பதிலாகச் சத்து மாவு கஞ்சி அல்லது முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம். மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்துவிட்டு, காய்கறிகளின் அளவை இரண்டு மடங்காக உயர்த்துங்கள். குறிப்பாக நீர்ச்சத்துள்ள காய்கறிகளான புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது உங்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இரவு உணவை 7 மணிக்கெல்லாம் முடித்துவிடுவது எடை குறைப்புக்கு மிக முக்கியம். இரவில் ஆவியில் வேகவைத்த உணவுகளான இடியாப்பம் அல்லது கோதுமை ரவை கிச்சடி போன்றவற்றை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த 30 நாட்களில் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது கட்டாயம். தண்ணீர் உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இடைப்பட்ட நேரங்களில் பசி எடுத்தால் பிஸ்கட் அல்லது நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக ஒரு ஆப்பிள் அல்லது கொய்யாப்பழம் சாப்பிடலாம். அதேபோல், ஒரு நாளைக்கு 30 நிமிடம் வாக்கிங் அல்லது ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்வது இந்த டயட் பிளானை இன்னும் வேகப்படுத்தும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், வாரம் ஒருமுறை உங்கள் எடையைச் சரிபார்க்கவும். ஆரம்பத்தில் எடை குறைவது மெதுவாகத் தெரிந்தாலும், ஒரு மாத கால முடிவில் உங்கள் உடல் லேசாகவும் உற்சாகமாகவும் மாறுவதை நீங்கள் உணர முடியும். 30 நாட்கள் முடிந்துவிட்டதே என்று மீண்டும் பழையபடி கண்ட உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்காமல், இதே பழக்கத்தைத் தொடர்ந்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஸ்லிம்மாக இருக்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com