
கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய பரஸ்பர உணர்வு பரிமாற்றமே காமம். இந்தியா போன்ற நாடுகளில் காமம் மற்றும் சுய இன்பம் காணுதல் போன்ற விஷயங்கள் மிக மோசமா சித்தரிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் ‘sex eduaction’ என்ற பேச்சை எடுத்தாலே பஞ்சாயத்து தான். அதிலும் குறிப்பாக ஒரு பெண் உடல் உறவில் ஏதேனியெனும் ஒன்றை கேட்டு பெற்றால் அது எதோ பெரும் பாவம் போல கருதப்பட்டது. இன்று நாம் அந்த தலைமுறை தடைகளை தாண்டி ஓரளவுக்கு கடந்து வந்தாலும்.. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு செய்லபாடுகள் மோசமாகத்தான் அணுகப்படுகின்றன, அதிலும் பெண்கள் மோசமாகவே சித்தரிக்கப்படுகின்றன.
ஆர்கஸம் என்றால் என்ன?
உச்சகட்டம் என்பது உடலுறவின் இறுதியில்ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது, பெண்களுக்கு கருப்பை வாயில் சுருக்கம் ஏற்படுகிறது. அத்துடன் இருவருக்கும் உணர்வு ரீதியாக ‘உன்னதமான’ ஒன்றை அனுபவிக்கின்றனர்.
ஆண்கள் உச்சகட்டத்தை அடைந்துவிட்டனர் என்பதற்கு சான்றாக அவர்களுக்கு விந்து வெளியேற்றம் நிகழ்கிறது, பெண்களுக்கு Squrit என்று சொல்லப்டுகிற திரவம் வெளிப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் பெண்கள் பொய்யாக தாங்கள் இன்பத்தை அடைந்ததாக சொல்லுவதாக ஆய்வு முடிவுக்கள் தெரிவிக்கின்றன.
ஆண்களுக்கு எப்படி முழுமையடையாத உடல் உறவு உளவியல் ரீதியாக வெகுவாக பாதிக்கிறதோ அதே அளவுக்கு பெண்களையும் பாதிக்கும். சமயங்களில் இதனால் குடும்ப உறவில் விரிசல் கூட ஏற்படலாம்.
இதை எப்படி கையாளலாம்..!
காமத்தை பொறுத்தவரை யார் முதலில் கேட்கிறாரார்கள் என்பதை விட அந்த அனுபவத்தை இரண்டு பேருமே திறம்பட கையாள வேண்டும் என்பது அத்தியாவசியமான ஒன்று. உடலுறவு எதோ முத்தம் கொடுப்பதை போல ஒரு நிமிட வேலை அல்ல.. அது பல படிநிலைகளை கொண்டுள்ளது. பல ஆண்கள் வெறும் Penitration மட்டும் கவனம் செலுத்தி Foreplay என்கிற தாம்பத்தியத்திற்கு முந்தைய விஷயத்தை தவறவிட்டு விடுகிறார்கள்.
Foreplay என்ற வார்த்தையை நாம் இயல்பாக கடந்து வந்திருப்போம், ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘The Great Indian Kitchen” படத்தை பார்த்தால் அதில் இந்த தாம்பத்தியத்திற்கு முந்தைய விளையாட்டு பற்றிய தேவையையும் அவசியத்தையும் பற்றி பேசியிருப்பார்கள்.
உண்மையில் ஆண்களை விட பெண்கள் படுக்கை அறையில் ‘emotionally vulnurable” இருப்பதற்கான சாத்தியம் அதிகம். Foreplay மூலம் அவர்களை உணவு ரீதியாக உங்களால் திருப்தி படுத்த முடியும்.
மேலும் சில நேரங்களில் அவர்கள் வலிக்கிறது அல்லது எரிகிறது என்று சொன்னால் உடனடியாக நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும், உங்கள் துணையின் விருப்பத்திற்கு எதிராக கட்டாயப்படுத்துதலை தவிர்க்கலாம்.
துணையுடன் பேசுதல்!
தினமும் ஒரே பேட்டர்னில் கலவி கொள்ள வேண்டாம். வேறு வேறு “Position” முயற்சி செய்யலாம். முதல் முறையாக நீங்கள் ஒரு “Position” -ஐ முயற்சித்து பார்க்க போகிறீர்கள் என்றால், உங்கள் துணையுடன் அதுகுறித்த உரையாடலில் ஈடுபடுங்கள், அவர்களிடம் கருடது கேளுங்கள். கலவி சார்ந்து நிறைய படியுங்கள். சுகாதாரமான ஆரோக்கியமான கலவியில் ஈடுபட முயலுங்கள்.
தாம்பத்தியத்திற்கு பிந்தைய கவனிப்பு!
உடலுறவு முடிந்த பின்னர் உங்கள் துணையோடு பேசுங்கள். அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கேனும் அசௌகரியமாக உணர்கிறீர்களா என்று கேளுங்கள், அவர்களை பாராட்டுங்கள். எக்காரணத்தை கொண்டும் கலவி முடிந்தவுடன் எழுந்து போய் போன் நோண்டுவது, துணையாக அமர்வது, தூங்குவது அல்லது வெளியே செல்வது போன்ற செயலை செய்யாதீர்கள். அது உளவியல் ரீதியாக உங்கள் துணியை பாதிக்க கூடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.