
1. சுவிட்சர்லாந்து (Switzerland)
சுவிட்சர்லாந்து அதன் பிரமிக்க வைக்கும் ஆல்ப்ஸ் மலைகள், ஏரிகள் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகளுக்காகப் பிரபலமானது. உலகின் பணக்காரர்கள் மத்தியில் ஒரு சொகுசு விடுமுறைக்கு இது முதன்மையான தேர்வாகும். இங்கு தங்குமிடம், உணவு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மிக அதிக விலை கொண்டவை.
2. அமெரிக்கா (United States)
அமெரிக்காவில், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்கள் அதிக செலவு மிகுந்த பயணத் தலங்களில் அடங்கும். நியூயார்க்கில் உள்ள ஹோட்டல்களின் ஒரு நாள் கட்டணம் சராசரியாக 687 அமெரிக்க டாலர்களைத் தாண்டுகிறது. அங்கு உள்ள ஆடம்பர ஹோட்டல்கள், சிறந்த உணவகங்கள், ஷாப்பிங் மற்றும் போக்குவரத்து ஆகியவை பயணத்தின் மொத்தச் செலவை அதிகரிக்கின்றன.
3. ஐஸ்லாந்து (Iceland)
"நெருப்பு மற்றும் பனியின் தேசம்" என்று அழைக்கப்படும் ஐஸ்லாந்து, அதன் எரிமலைகள், பனிப்பாறைகள், நீரூற்றுகள் மற்றும் அழகான நிலப்பரப்புகளுக்காகப் புகழ் பெற்றது. ஐஸ்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்தாலும், இங்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்தும் அதிக விலை கொண்டவை.
4. ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates)
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்கள், அதன் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவை. இங்குள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை மிக ஆடம்பரமானவை. ஒரு நாளைக்கு 100,000 அமெரிக்க டாலர் செலவாகும் பென்ட்ஹவுஸ்கள் மற்றும் பிரத்தியேக உணவு விடுதிகள் இங்கு உள்ளன.
5. மாலத்தீவுகள் (Maldives)
மாலத்தீவுகள் ஆடம்பர சொகுசு விடுமுறைக்கான சிறந்த இடமாகும். ஒரு நாளைக்கு சராசரியாக 267 அமெரிக்க டாலர்கள் செலவாகும். நீர்-மேல் வில்லாக்கள் மற்றும் தனியார் படகுப் பயணங்கள் போன்ற ஆடம்பர வசதிகள், செலவுகளைப் பல மடங்கு அதிகரிக்கின்றன.
6. கேமன் தீவுகள் (Grand Cayman, Cayman Islands)
பிரிட்டிஷ் நாட்டின் கடல்கடந்த பிரதேசமான கேமன் தீவுகள், கரீபியன் கடலில் உள்ள ஒரு பிரபலமான விடுமுறை இடமாகும். ஹாலிவுட் பிரபலங்களுக்கு மிகவும் பிடித்தமான இங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மிக அதிக விலை கொண்டவை.
7. ஹொனலுலு, ஹவாய் (Honolulu, Hawaii)
ஹவாய்த் தீவுகளுக்கான நுழைவாயில் நகரமான ஹொனலுலு, அதன் அழகிய கடற்கரைகள், வானளாவிய மலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களால் பயணிகளை ஈர்க்கிறது. இருப்பினும், இங்கு தங்குமிடம், உணவு, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மிக அதிக செலவு மிகுந்தவை. சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படுவதும் செலவை அதிகரிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.