Hero xpulse 200 ஓட்டவும் செய்யலாம் பறக்கவும் செய்யலாம்
Hero xpluse 200 New, பட்ஜெட்-Friendly அட்வெஞ்சர் பைக்! (4.5 / 5)
வணக்கம் ரைடர்ஸ்:
Hero நிறுவனம் புதுசா வந்து இருக்கும் XPulse 210 அட்வெஞ்சர் பைக்கை அறிமுகம் செய்திருக்காங்க. இந்த பைக் அழகு, வசதிகள், மற்றும் செயல்திறன் மூணும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட ஒரு வேர்ஷன். பட்ஜெட் அட்வெஞ்சர் ரைடிங் விரும்புறவங்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!
டிசைன்:
பைக் ஒரு ரஃப் & டஃப் அட்வெஞ்சர் லுக்கோட வந்திருக்கு. புதிய LED ஹெட்லைட்ஸ், புதுசா வடிவமைச்சு இருக்குற பைல் டேங்க், மேலே மவுண்ட் பண்ணிய எக்ஸாஸ்ட்—இதெல்லாம் பைக்கை இன்னும் மாடர்ன் லுக்கா காட்டுது. நிறய நிறய ஆப்ஷன்ஸ் கூட இருக்கு!
எஞ்சின் & செயல்திறன்:
இது 210cc liquid-cooled engine - Hero Karizma XMRல வந்த அதே எஞ்சின் தான்! 24.26 hp & 20.7 Nm டார்க் கிடைக்கும், Xpulse 200வ விட இன்னும் பவர்ஃபுல். 6-ஸ்பீடு கியர்பாக்ஸோட, ஹைவேயிலும் எளிதா ஓட்டலாம்.
மேலும் படிக்க: KTM 390 Adventure 2025 மதிப்பீடு: ஒரு மதிப்புமிக்க மேம்படுத்தலா?
ஹாண்ட்லிங் & சஸ்பென்ஷன்:
41mm telescopic fork (210mm travel) முன்புறமும் 205mm travel mono-shock பின்புறமும் இருக்கு. ஆஃப்-ரோடிங்குல இந்த சஸ்பென்ஷன் மிகை செம காம்போ! ஹைவேயிலயும் கம்போர்டபிள் ஆக இருக்கும். அடைப்பில்லாம எங்க வேண்டுமானாலும் ஓட்டலாம்!
டெக்னாலஜி:
4.2-inch TFT டிஸ்ப்ளே
Bluetooth & Navigation
3 ABS மோட்ஸ் - Road, Off-road, Rally
ABS முற்றிலும் Off பண்ணிக்கலாம் (கெத்தா ஆஃப்-ரோடிங் செய்ய!)
மேலும் படிக்க: 2025 SUZUKI ACCESS 125 – நம்ம ஊருக்கேத்த ALL-ROUND ஸ்கூட்டர்!
டயர்கள் & பிரேக்கிங்:
முன்புற டயர்: 90/90-21
பின்புற டயர்: 120/80-18
பிரேக்குகள்:
முன்பு: 276mm டிஸ்க்
பின்: 220mm டிஸ்க்
டயர் சைஸ் பெரியதா இருக்கு, அதனால ஆஃப்-ரோடிங்கிலும் ஹைவேயிலும் பைக் அதிக ஸ்டேபிலிட்டி கொடுக்குது!
விலை:
₹1.76 லட்சம் (Base Model)
₹1.86 லட்சம் (Pro Model)
தீர்ப்பு:
Hero XPulse 210 – ஒரு New, பட்ஜெட்-Friendly அட்வெஞ்சர் பைக்! Off Roading, High way இரண்டிலும் அருமையா ரைடு செய்யலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்