ஹோட்டல் ஸ்டைல் மட்டன் கீமா பிரியாணி.. வீட்டிலேயே சுவையாக செய்து விடலாம்!

மட்டன் கீமாவில் மசாலாக்களின் தீவிர ஆழமாக இறங்கி அது பாசுமதி அரிசியோடு சேர்ந்து...
ஹோட்டல் ஸ்டைல் மட்டன் கீமா பிரியாணி.. வீட்டிலேயே சுவையாக செய்து விடலாம்!
Published on
Updated on
2 min read

உலகத்திலேயே பிரியாணி பிடிக்காது என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிரியாணி பிடித்திருக்கிறது. கடத்த ஆண்டு வெளிவந்த ஆன்லைன் நிறுவனங்களின் வருடாந்திர பட்டியலில் கூட அதிகம் ஆர்டர் செய்து வாங்க பட்ட உணவு பிரியாணி தான். சென்னை முதல் ஹைதராபாத் வரை பல இடங்களில் பல்வேறு பிராணிகள் இருந்தாலும் , மட்டன் கீமா பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அதற்கு காரணம்  மென்மையாக அரைத்த மட்டன் கீமாவில்  மசாலாக்களின் தீவிர ஆழமாக இறங்கி அது  பாசுமதி அரிசியோடு சேர்ந்து வீசும் நறுமணம்  வயிறு முழுவதும் சாப்பிட்டவர்களுக்கு கூட பசியை எடுக்கும். இப்படிப்பட்ட சுவை மிகுந்த உணவை இன்று நாம் வீட்டிலேயே எப்படி சமைப்பது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா பகுதி

  • மட்டன் கீமா – ½ கிலோ

  • பெரிய வெங்காயம் – 3

  • தக்காளி – 3 

  • இஞ்சி-பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி

  • பச்சை மிளகாய் – 4-5

  • புதினா + கொத்தமல்லி – தலா ½ கப்தயிர் – ½ கப்

  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

  • மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்

  • பிரியாணி மசாலா தூள் – 1½ டீஸ்பூன்

அரிசி பகுதி

  • பாசுமதி அரிசி – 2½ கப்

  • நெய் + எண்ணெய் – 4-5 மேசைக்கரண்டி

  • பட்டை – 2 துண்டு

  • ஏலக்காய் – 4

  • கிராம்பு – 5-6

  • பிரியாணி இலை – 2

  • சீரகம் – 1 டீஸ்பூன்

  • வெங்காய பொரியல் 

  • குங்குமப்பூ + சூடான பால் – 2 டீஸ்பூன் 

  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

அடுப்பில் பெரிய வாணலியை வைத்து நெய் + எண்ணெய் சூடாக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகப் பொரிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதங்கும் வரை கிளறவும். இப்போது மஞ்சள், மிளகாய்த் தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும்.

மட்டன் கீமாவை சேர்த்து நன்கு கிளறி, தண்ணீர் வெளியே வரும் வரை வதக்கவும். பிறகு தயிர் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
புதினா + கொத்தமல்லி பாதியை சேர்த்து, மூடி 8-10 நிமிடம் மெதுவான தீயில் வேக விடவும். கீமா நன்கு வெந்து, எண்ணெய் மேலே தெரியும் போது அடுப்பை அணைக்கவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் அரிசியை 70-75% வேக வைக்கவும் (அரிசி பாதி வெந்து, விரலால் அழுத்தினால் உடையும் நிலை). தேவையான உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து வடிக்கவும்.
கீமா வாணலியிலேயே மேலே பாதி அரிசியை பரப்பவும்.
மீதி உள்ள பிரைடு ஆனியன், புதினா-கொத்தமல்லி, குங்குமப்பூ பால், கொஞ்சம் நெய் தெளிக்கவும். மீதி அரிசியை மேலே பரப்பி, அதே போல் மீதி பொருட்களைத் தூவவும்.அலுமினியத் தாள் அல்லது ஈரமான துணியால் இறுக்கமாக மூடி, மிகக் குறைந்த தீயில் 20-25 நிமிடம் தம் போடவும்.

அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே விடவும். பிறகு மெதுவாக கலந்து எடுக்கவும் – அடுக்கடுக்கான மணம், மென்மையான கீமா பிரியாணி ரெடி...  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com