ஆரோக்கியமான சிகப்பு அரிசி பொங்கல்… இந்த பொங்கலுக்கு கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணி பாருங்க!

அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் சற்று அதிக நேரம் வேகும்...
ஆரோக்கியமான சிகப்பு அரிசி பொங்கல்… இந்த பொங்கலுக்கு கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணி பாருங்க!
Published on
Updated on
1 min read

உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பண்டிகை நமது தமிழ் கலாச்சாரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது பொங்கல் தான் இனிப்பே நிறைந்த இந்த உணவு இல்லாமல் பொங்கல் பண்டிகை முடிவு பெறாது. நாம் அனைவரும் சாதாரண வெள்ளை அரிசியில் தான் இதுவரை பொங்கல் செய்து பண்டிகையை கொண்டாடி இருப்போம். இந்த ஆண்டு கொஞ்சம் ஆரோக்கியமான முறையில் சிகப்பு அரிசியை பயன்படுத்தி பொங்கல் சமைத்து பாருங்கள்.

சிவப்பு அரிசியில் வெல்லப் பொங்கல் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுவையாக இருக்கும். சிகப்பு அரிசி அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் சற்று அதிக நேரம் வேகும். எனவே சமைப்பதற்கு முன் அரிசியை ஊற வைப்பது மிகவும் அவசியமானது முக்கியம்.

தேவையான பொருட்கள்

  • சிவப்பு அரிசி 1 கப், பாசிப்பருப்பு ¼ , வெல்லம் 1½ கப்,

  • தண்ணீர் 4½ முதல் 5 கப், பால் – ½ கப் முதல் 1 கப், நெய் 4-5 டேபிள் ஸ்பூன்

  • முந்திரிப்பருப்பு 10-15, திராட்சை சிறிது, ஏலக்காய் பொடி ½ டீஸ்பூன்

  • தேங்காய் துருவல் 3-4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

சிகப்பு அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி, குறைந்தது 3முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவும். இது விரைவாக வேக உதவும்.வெறும் வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வறுக்கவும். அரிசியையும் சேர்த்து 30 வினாடி வறுக்கலாம். பின்னர் குக்கரில் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு சேர்க்கவும்.4½–5 கப் தண்ணீர் + ½ கப் பால்சேர்த்து கலக்கவும்.5-6 விசில் வரும் வரை வைக்கவும் (சிகப்பு அரிசி அதிக நேரம் எடுக்கும்).

விசில் அடங்கியதும் திறந்து, மரக் கரண்டியால் நன்கு மசித்து குழைத்து விடவும். அதனை தொடர்ந்த வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும். மேலும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து, குறைந்த தீயில் 5-8 நிமிடம் கிளறவும். அப்போது தான் பொங்கல் பதம் வரும். மிகவும் கெட்டியாக இருந்தால் சூடான தண்ணீர் அல்லது பால் சிறிது சேர்க்கலாம்.கூடவே சுவையை அதிகரிக்க தனியே ஒரு கடாயில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி உடன் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

இதை பொங்கலில் ஊற்றி கலந்து இறக்கவும். உங்களுடைய சுவையான ஆரோக்கியமான பொங்கல் தயார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com