உங்க பசங்களுக்கு காளான் கிரேவி இப்படி செஞ்சு கொடுங்க!

இந்த புரட்டாசி மாதத்தில் நிச்சயம் இந்த டிஷ் உங்கள் வீட்டில் பெரும் வரவேற்பைப் பெறும். உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில், சத்தான காளான் கிரேவியை இப்படிச் செய்து பாருங்கள்.
உங்க பசங்களுக்கு காளான் கிரேவி இப்படி செஞ்சு கொடுங்க!
Published on
Updated on
1 min read

காளான் கிரேவி என்பது அசைவ உணவு பிரியர்களைக் கூட அசத்தும் ஒரு ருசியான சைவ உணவு. அதுவும் இந்த புரட்டாசி மாதத்தில் நிச்சயம் இந்த டிஷ் உங்கள் வீட்டில் பெரும் வரவேற்பைப் பெறும். உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில், சத்தான காளான் கிரேவியை இப்படிச் செய்து பாருங்கள்.

காளான் கிரேவிக்குத் தேவையான பொருட்கள்:

காளான் (மஷ்ரூம்): 200 கிராம் (சுத்தம் செய்து நறுக்கியது).

பெரிய வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது).

தக்காளி: 2 (அரைத்து விழுதாக்கியது).

இஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன்.

கரம் மசாலா தூள்: அரை டீஸ்பூன்.

மிளகாய் தூள்: 1 டீஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப).

தனியா தூள்: 1 டீஸ்பூன்.

மஞ்சள் தூள்: கால் டீஸ்பூன்.

தேங்காய்ப் பால் அல்லது முந்திரி விழுது: 2 டேபிள்ஸ்பூன் (கிரேவியின் சுவைக்காக).

எண்ணெய்: 3 டேபிள்ஸ்பூன்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய்: தலா 1.

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள்: சிறிதளவு.

உப்பு மற்றும் தண்ணீர்: தேவையான அளவு.

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வேக விடவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

நறுக்கி வைத்த காளானைச் சேர்த்து, காளான் சுருங்கும்வரை வதக்கவும். காளானில் இருந்து தண்ணீர் வெளிவரும். காளான் வெளிவிடும் தண்ணீரில் கிரேவி நன்கு கொதிக்க வேண்டும்.

கிரேவியின் கெட்டித்தன்மைக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேங்காய்ப் பால் அல்லது முந்திரி விழுதைச் சேர்க்கவும். இது கிரேவிக்குச் சிறந்த சுவையையும், பளபளப்பையும் கொடுக்கும். கிரேவி 5 நிமிடங்கள் கொதித்ததும், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும். சப்பாத்தி, பரோட்டா, அல்லது தோசையுடன் குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com