இளைஞர்களின் உயிரை பறிக்கிறதா ஜிம்? மருத்துவர்கள் கூறும் அறிவுரை!

கடுமையான உடற்பயிற்சி அல்லது பாடி பில்டிங் செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிறிதாக நெஞ்சில் வலி ஏற்படும் பட்சத்தில்...
இளைஞர்களின் உயிரை பறிக்கிறதா ஜிம்? மருத்துவர்கள் கூறும் அறிவுரை!
Published on
Updated on
2 min read

இன்றைய கால இளைஞர்களும் சரி, இளம்பெண்களும் சரி தங்களது உடலில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டவும், தங்களது கட்டுடல் மேனியை பராமரிக்கவும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என்ற எந்த பாகுபாடின்றி அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினர் இதை வாழ்வின் ஒரு அங்கமாகவே மாற்றிவிட்டனர்.

ஆனால் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது சிலர் மாரடைப்பினால் உயிரிழந்துவிடுகின்றனர். இதில் வயது வரம்பு ஏதும் இன்றி இளைஞர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் இளம்வயதினரின் உயிர் பறிபோவதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இதற்கான காரணங்களாக மருத்துவர்கள் கூறுவது, பொதுவாகவே உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபருக்கு சாதாரணமாக நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படும் நிலை வரலாம். ஆனால், அது மாரடைப்பு என்று உணர்வதற்குள் மரணம் நிகழந்துவிடுகிறது. ஆனால் சரியான காரணங்களை பிரேத பரிசோதனையில் மட்டுமே நாம் காண முடியும்.

ஆனால் இதுபோன்ற மாரடைப்பு நிகழ்வதில், 3 விதங்கள் இருக்கிறது. முதலாவது, இரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்படுதல். ஏற்கனவே இரத்தக்குழாய்களில் மிதமான அளவில் சில இடங்களில் அடைப்புகள் இருந்திருக்கலாம். அந்த அடைப்புகள் உடற்பயிற்சி செய்யும்போது, அடுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது, உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்போது இதயம் இயங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது, பெருந்தமனியில் ஏற்படும் அழுத்தம் அல்லது முறிவு காரணமாகவும், அதோடு கூட உடைபயிற்சி மேற்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வகை மிகவும் அரிதான இன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சில காரணங்களாலேயே கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது கணிக்கமுடியாத ஒன்று. கடுமையான உடற்பயிற்சி அல்லது பாடி பில்டிங் செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிறிதாக நெஞ்சில் வலி ஏற்படும் பட்சத்தில் மருத்துவரின் உதவியை நடுவது என்பது சிறந்தது. உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும் சில வரைமுறைகளை வைத்துக்கொள்வதும் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே உடற்பயிற்சி மேற்கொள்வது, எடை அதிகம் உள்ள உபகரணங்களை கொண்டு சிரமத்துடன் உடற்பயிற்சி மேற்கொள்வது, அதிகப்படியான மனஅழுத்தத்துடன் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இது தவிர்த்து, படிப்பு, வேலை பளு, சமூக வாழ்க்கை போன்றவை தரும் மனஅழுத்தம், மனசோர்வு போன்றவற்றாலும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதில் இருந்து இளைஞர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், உடல் மற்றும் மனநிலையை சமநிலையோடு பேணுவது என்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com