

இன்றைய நவீன உலகில் வெற்றி என்றால் பெரிய வீடு, கார், அடுத்தடுத்த பாரிங்ன் ட்ரிப் — இதுதான் success-ஆ? இதை தான் சமூகமும் சுற்றுசூழலுக்கு நமக்கு கடத்துகிறத?. இதில் சில உளவியல் சார்ந்த சிக்கல்களும் குழப்பங்களும் உள்ளது அதை பற்றி புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது உள்ள சூழலுக்கு நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமூக வலைதலத்தில் நம்மை மூழ்கடித்து நம் நேரைத்தையும் கவனத்தையும் செலவழிக்கிறோம். அங்கே நம்மை பற்றி சில விஷயங்களை, உதாரணமாக நம் திறமைகள், டெய்லி லைப் ஸ்டைல், கெட் ரெடி வித் மீ மற்றும் பெர்சனல் என பகிர்கிறோம். இவை அனைத்தும் நம் விருப்பத்தின் பேரிலா அல்லது சமூக அழுத்தமா என்பதை கவணிப்போம்.
நிச்சயமாக Luxury வாழ்வின் வெற்றிதான் ஆனால் அது கடின உழைப்பின் பலனாகவோ அல்லது நம் அத்தியாவசியத்தை பூர்த்தி செய்யும் நிலையிலோ அது பொருந்தும். இப்படியான வெற்றி நம்மை பைனான்சியல் ஸ்டாபிளிட்டி மற்றும் இன்டிபென்டென்ட் உடன் தக்கவைக்கும். நம் உழைப்பும் சேமிப்போம் அதனை நோக்கியது தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை நாம் விரும்பும் பட்சத்தில் இருக்கும் வரையில் அந்த வெற்றியை நோக்கிய பயணம் நம்மை பாதிக்காது அது எப்போது சமூக அழுத்தமாக மறுகிறோதோ அப்போது தான் சிக்கல்.
மாறாக இந்த Luxury லைப் சமூக அழுத்தமாக இருப்பின் அது அடுத்தவர்களின் வாழ்வோடு ஒப்பீடு செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும். இது தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுத்தவர்களை impress செய்யும் மனநிலைக்கு வழிவகுக்கும். உதாரணமாக உடனிருப்பவர் வாங்கும் புதிய பொருட்கள், பிராண்டட் மொபைல் அல்லது வெளிநாட்டு பயணங்கள், இவை நம் தேவையை தாண்டியோ அல்லது தேவையற்றதாகவோ இருப்பின் அந்த வெற்றி அல்ல சமூக அழுத்தம். இது EMI, ஆடம்பரத்தை வெளிப்படுத்துதல் மற்றும் நிதி நெருக்கடி போன்ற மன அழுத்தங்களுக்கு வழி செய்யும்.
Luxury தவறில்லை அது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை. ஆனால் அது வாழ்க்கையின் ஒரே அளவுகோல் அல்ல. Luxury வாழ்க்கை வெற்றியின் அடையாளமாக இருக்கலாம்; ஆனால் வெற்றியை luxury-யால் மட்டும் அளக்க முடியாது. உண்மையான வெற்றி = மனநிம்மதி + financial security + meaningful relationships.
Luxury வாழ்க்கை வெற்றியின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் அது சமூக அழுத்தத்தினால் வாழப்படும் வாழ்க்கையாக மாறினால், அது வெற்றியல்ல —அது ஒரு போட்டி மனநிலை. நாம் Luxury-யை அடைய வேண்டுமா? ஆம். ஆனால் அதை Show off செய்ய வேண்டுமா? அவசியமில்லை.வெற்றியை உலகம் அளக்க விடாமல், நாமே நம் அளவுகோலை உருவாக்கும் போது தான் உண்மையான சாதனை தொடங்குகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.