

இந்தியாவில் சமீபத்தில், நாய்கள் மீதான பிரச்சனை அதிகளவில் அதிகரித்து உள்ளது. மனிதனின் உற்றத் தோழன் என அறியப்படும் நாய்கள் சமகாலத்தில் பெரும் எதிர்ப்புணர்வு கொண்ட ‘aggressive’ ஆன விலங்காக எப்படி மாறிப்போயின என்பது இன்றுவரை விவாதப்பொருளாகவே உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நாம் திரும்பிய பக்கமெல்லாம் நாய்க்கடி குறித்த செய்திகளை மட்டுமே பார்த்து வருகின்றோம். உண்மையிலே நாய்களும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடித்து குதறி சித்ரவதை செய்து வருகின்றன. மேலும் நாய்க்கடி பிரச்சனை தற்போது நாட்டின் பிரச்சனையாகவும் மாறிவிட்டது.
ஆனால் நாய்கள் உண்மையில், மனிதனுக்கு வேட்டைச் சமூகமாக இருந்த காலத்திலியே உதவி வந்த ஒரு உயிரினம்தான். அவைகளுக்கு முறையான உணவு கிடைக்காததால்தான் இப்படி கோரமான குணத்திற்கு அவை தள்ளப்பட்டுள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான் மனதை நெகிழவைக்கும் ஒரு சம்பவம் கல்கத்தா -வில் நடைபெற்றுள்ளது. கொல்கத்தாவின் ரயில்வே குடியிருப்பின் கழிவறைக்கு வெளியே, புதிதாக ஒரு பச்சிளங்குழந்தையை தொப்புள்கொடி கூட உதிராத நிலையில் யாரோ கைவிட்டு சென்றுவிட்டனர். இரவெல்லாம் கடுமையான குளிர் நிலவிய சூழலில், ரோட்டிலேயே அந்தக் குழந்தையை விட்டுச்சென்றுள்ளனர். போர்வை கூட இல்லாமல் அப்படியே அந்தக் குழந்தை தரையில் கிடத்தப்பட்டிருந்தது.
ஆனால் அங்கிருந்த சில நாய்கள் குழந்தையை நெருங்கி வந்து பார்த்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம், அவை குழந்தையை சுற்றி அரண் போல வட்டமாக அமர்ந்துள்ளன. மேலும் அவரை குறைத்து சத்தம்கூடப்போடவில்லை எனக்கூறப்படுகிறது. விடிந்தபிறகு தான் இப்படி ஒருவிஷயத்தை அக்கபக்கத்தினர் கவனித்துள்ளனர்.
உடனே குழந்தையை மீட்டு அதனை ஒரு துணியில் சுற்றி, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவே கூறியுள்ளனர். பெற்றோரே பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிச்சென்ற நிலையில், நாய்கள் அரணாக விளங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.