சிறுசேமிப்பின் நன்மைகளை மக்கள் மீண்டும் உணர துவங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில், ஒப்பிட்டுப்பார்த்து சேமிப்பு திட்டங்களில் சேரும் மக்களின் அளவு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கிடைக்கும் பணத்தை நிலம் அல்லது தங்கத்தில் முதலீடு செய்யத்தான் மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் கிடைக்கும் சிறிய தொகையை கூட, சிறுசேமிப்புகளில் சேர்த்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தான் இருக்கும் இடத்தைவிட்டு, இந்த அழகிய உலகை சுற்றிப்பார்க்க பலருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில், தங்களிடம் உள்ள பணத்தை சேமிப்பில் போட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு அதை சேமித்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் இப்போதெல்லாம் மக்கள் சுற்றுலா சென்று வரும் விஷயங்கள் அடிக்கடி நிகழ்கின்றது.
அந்த வகையில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் உள்ள ஒரு சேமிப்பு முறையை பயன்படுத்தி பெரிய லாபத்தை அடையும் வழி ஒன்றை பற்றி இப்போது காணலாம். இந்திய குடிமக்களாகிய நம்மிடம், நிச்சயம் ஒரு வங்கி கணக்கு இருக்கும். அந்த கணக்கை பயன்படுத்தி FD முறையில் நம்மால் பணத்தை சேமிக்க முடியும்.
FD கணக்கு
உங்களிடம் கிடைக்கும் ஒரு பெரிய அல்லது சிறிய தொகையை சில நாள்கள் முதல் பல வருடங்கள் வரை உங்களால் FD எனப்படும் FIXED DEPOSIT முறையில் சேமித்து வைக்க முடியும். இதற்கு 2 சதவிகிதத்தில் இருந்து சுமார் 7.5 சதவிகிதம் வரை வட்டியை வழங்குகிறது வங்கிகள்.
மேலும் படிக்க: ஒரே ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு.. எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
FD கணக்கு முறை
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில், FD முறையில் 2 லட்சம் ரூபாயை சேமிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அதை 7 நாள் முதல் 5க்கும் மேற்பட்ட வருடங்கள் உங்களால் FDயில் சேமிக்க முடியும். சரி உங்களிடம் உள்ள அந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை சுமார் ஓராண்டு காலத்திற்கு FD கணக்கில் வைத்திருந்தால், அதற்காக உங்களுக்கு 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். அதாவது நீங்கள் சேமிக்கும் அந்த ஒரே ஆண்டில், வட்டியாக மட்டும் உங்களுக்கு 15,000 ரூபாய் கிடைக்கும்.
FDயில் போடப்படும் பணத்திற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி மாறும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உங்கள் வங்கியில் FD சேமிப்புக்கு அளிக்கப்படும் சலுகைகளை மனதில் கொண்டு சேமித்தால் அது சிறப்பானதாக அமையும்.
FDயின் நன்மைகள்
2 லட்சம், 5 லட்சம் என்ற பெரிய தொகையை மட்டுமல்ல, சில ஆயிரம் ரூபாய்களை கூட நம்மால் FD கணக்கில் சேமிக்க முடியும். இந்தியாவில் இருக்கும் வங்கிகள் அனைத்தும், சில வித்யாசமான சலுகைகளை இந்த FD முறைக்கு வழங்குகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஒரு வங்கி தங்களிடம் 333 நாள்களுக்கு FDயில் பணத்தை சேமித்தால், அதற்கு 7.5 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது.
மேலும் படிக்க: குறைந்த ப்ரீமியம்.. இரட்டிப்பு லாபம் - அஞ்சலக PLI திட்டம் பற்றி தெரியுமா?
இது போல பல வங்கிகளுக்கும், பல வகையில் FD மூலம் சலுகைகளை வழங்குகின்றன. அடுத்த ஓராண்டு அல்லது 5 மாதங்களுக்கு உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படாது என்று நீங்கள் நினைத்தால், அதை கூட FDயில் போடு நல்ல லாபம் பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்