அஞ்சலக "சுவிதா" திட்டம்.. உங்கள் சேமிப்புக்கு 5 மடங்கு லாபம் - யாரெல்லாம் இணையலாம்?

உங்களது 21வது வயதில் இருந்து மாதந்தோறும் வெறும் 310 ரூபாய் சேமித்து வந்தாலே போதும்.
suvitha savings scheme
suvitha savings schemeAdmin
Published on
Updated on
2 min read

சிறு சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு என்பது அனைவரிடமும் உள்ளது. இன்றைய இளைஞர்கள், இப்போதே தங்களுடைய எதிர்காலத்திற்கு சேமிக்க ஆரம்பித்துள்ளனர். அதே நேரம் நடுத்தர வயதுள்ளோரும் கூட, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க துவங்குகின்றனர். நல்ல பலன் தரும் திட்டங்களில் மக்கள் இணைந்தாலும், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மக்கள் இணைவது இன்றளவும் கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

பலரும் அதை தங்கள் மரணத்திற்கு பிறகு கிடைக்கும் ஒரு லாபமாகவே பார்க்கின்றனர். ஆனால் அது அப்படியல்ல, ஆயுள் காப்பீடும் ஒரு வகையில் சேமிப்பு தான். அந்த வகையில் ஆயுள் காப்பீடாகவும், எண்டோவ்மென்ட் காப்பீட்டு பாலிசியாகவும் செயல்படும் ஒரு திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். அஞ்சலகத்தை பொறுத்தவரை 6 வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் இந்த மாற்றத்தக்க முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் "சுவிதா" திட்டம்.

சுவிதா திட்டம் எப்படி செயல்படுகிறது?

சுவிதா திட்டம் என்பது அஞ்சலகத்தில் செயல்படும் பிற ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் ஒன்று தான். ஆனால் இந்த திட்டத்தை நம்மால் ஒரு எண்டோவ்மென்ட் காப்பீட்டு திட்டமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க: முதலீட்டோடு இணைந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் - எக்கச்சக்க லாபம் தரும் AEA திட்டம் பற்றி தெரியுமா?

ஆயுள் காப்பீடு மற்றும் எண்டோவ்மென்ட் காப்பீட்டு வேறுபாடு என்ன?

சுவிதா ஆயுள் காப்பீடு என்பது 19 வயது முதல் 50 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய பிரஜையாலும் திறக்கப்படக்கூடிய ஒரு திட்டம். அவர்களின் 80வது வயதில் இந்த திட்டம் முதிர்ச்சியடையும். அதுவே சுவிதா திட்டத்தை எண்டோவ்மென்ட் காப்பீட்டு திட்டமாக செயல்படுத்தினால், அதே வட்டி விகிதத்துடன் 35, 40, 45, 50, 55, 58 அல்லது 60 வயதில் திட்டம் முதிர்ச்சி பெறுவது போல மாற்றியமைக்க முடியும்.

சுவிதா எப்படி செயல்படுகிறது?

21 வயது கொண்ட ஒரு நபர், 2 லட்சத்திற்கான பாலிசியோடு சுவிதாவில் (ஆயுள் காப்பீட்டு திட்டம்) இணைகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அவரது 60 வயது வரை அந்த திட்டத்தில் பணத்தை சேர்க்க வேண்டும். 2 லட்சம் ரூபாய் பாலிசிக்கு, 21 வயது கொண்ட அந்த நபர் அவரது 60வது வயது வரை மாதம் 310 (GST இல்லாமல்) ரூபாய் ப்ரீமியம் செலுத்த வேண்டும். பிறகு அவரது 80வது வயதில் அந்த திட்டம் முதிர்ச்சியடையும்போது அவருக்கு வட்டியோடு சேர்த்து சுமார் 10,97,200 ரூபாய் கிடைக்கும்.

மேலும் படிக்க: ஐபிஎல் 2025: கொல்கத்தாவில் KKR - RCB மோதல்; மழை பாதிக்குமா?

அதுவே ஒருவர் தனது 21வது வயதில் சுவிதா திட்டத்தில் எண்டோவ்மென்ட் காப்பீட்டு பாலிசியாக எடுக்க விரும்பினால், சுவிதாவில் இணைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அதை எண்டோவ்மென்ட் காப்பீட்டு திட்டமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் அவர் சுவிதாவில் இணைந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு அதை எண்டோவ்மென்ட் காப்பீட்டு பாலிசியாக மாற்ற முடியாது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

சுவிதா திட்டம் தரும் நன்மைகள்

இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கணிசமான தொகையை லோன் மூலம் பெறும் வசதி உள்ளது. மேலும் இந்த திட்டத்தை வாபஸ் பெற விரும்பினால், திட்டத்தில் இணைந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அதை சந்தாதாரரால் செய்யமுடியும். பிற காப்பீட்டு திட்டங்களை ஒப்பிடும்போது, சுவிதா திட்டத்தை ஒரு முழு ஆயுள் காப்பீட்டு திட்டமாக செயல்படுத்தினால், நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் சுமார் 76 ரூபாய் போனஸ் கிடைக்கும்.

உங்களது 21வது வயதில் இருந்து மாதந்தோறும் வெறும் 310 ரூபாய் சேமித்து வந்தாலே போதும். கிட்டத்தட்ட நீங்கள் சேர்க்கும் 2 லட்சம் ரூபாய்க்கு, 5 மடங்காக 80 வயதின் முடிவில் 10,97,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com