மூடநம்பிக்கையால் எல்லை மீறிய குடும்பத்தினர்! ஆன்மா சாந்தியடைய இப்படி ஒரு காரியமா?

முதியவர் இறுதிச் சடங்கில் புதைக்கப்பட்ட விலைமதிப்பு மிக்க கார் .
இறுதிச்சடங்கில் புதைக்கப்பட்ட கார்
இறுதிச்சடங்கில் புதைக்கப்பட்ட கார் இறுதிச்சடங்கில் புதைக்கப்பட்ட கார்
Published on
Updated on
2 min read

வடகிழக்கு சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில், மெர்சிடிஸ்-பென்ஸ் கார் ஒன்று முதியவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் புதைக்கப்பட்ட சம்பவம், சட்ட மீறல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

ஏப்ரல் 9 அன்று, லியோனிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் எழுபது வயது முதியவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் சில கிராமவாசிகள் கலந்துகொண்டுள்ளனர். இறந்தவர் ஆடம்பரக் கார்களின் தீவிர சேகரிப்பாளராக இருந்துள்ளார். அதனால் அந்த முதியவர் இறந்த பின்பு, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி, அவரது பிள்ளைகள் ஒரு உண்மையான வாகனத்தைப் புதைத்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 1.1 மில்லியன் யுவான் (1,61,000 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள, கருப்பு நிற மெர்சிடிஸ்-பென்ஸ் S450L ரக காரில், செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் '8888' என்ற பதிவு எண் அந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரே மாதிரியான நான்கு இலக்கங்களைக் கொண்ட வாகன எண் தகடுகள் அதிஷ்டமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும், அவை உள்ளூரில் 250,000 யுவான் (37,000 அமெரிக்க டாலர்) வரை விலை பெறப்படுகிறது.

புதிதாக எழுப்பப்பட்ட அந்த முதியவரின் கல்லறைக்கல் அருகே, ஒரு கிரேன் காரைத் தூக்குவதை போன்ற காணொளிக் காட்சியில், அந்த வாகனத்தின் மீது ஒரு சிவப்புத் துணி போர்த்தப்பட்டு பக்கவாட்டுக் கண்ணாடிகளில் சிவப்பு ரிப்பன்கள் கட்டப்பட்டவாறு அந்த கார் இருந்தது. பின்னர், அந்த பரிசு பொருள் போன்று இருந்த காரை கிராமவாசிகள் குழிக்குள் தள்ள உதவியுள்ளனர். சிலர் மண்வெட்டிகளை எடுத்து அதை மண்ணால் மூடவும் செய்தனர். சீன இறுதிச் சடங்கு வழக்கத்தின்படி, இறந்தவர்களுக்கு வசதியான மறுவாழ்வை உறுதி செய்வதற்காக, கார்கள், வீடுகள் மற்றும் வீட்டு உபகரணங்களின் காகித மாதிரிகள் எரிக்கப்படும் ஒரு பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இணையத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சில இணையவாசிகளில் ஒரு தரப்பினர் அக்குடும்பத்தினர் தங்கள் செல்வத்தை வெளிக்காட்டிக் கொள்வதாகக் குற்றம் சாட்டினர். அதேசமயம் மற்றொரு தரப்பினர் உறவினர்கள் அச்செயலைத் துக்கத்தின் வெளிப்பாடு மற்றும் பிள்ளைப் பாசம் என்று நியாயப்படுத்தினர். பதப்படுத்தப்படாத காரைப் புதைப்பது, மண் மற்றும் நிலத்தடி நீரை கடுமையாக மாசுபடுத்துவதோடு, நிலப் பயன்பாட்டு விதிமுறைகளையும் மீறக்கூடும் என்று மற்றொரு தரப்பினர் கூறினர். பெய்ஜிங் ஃபஹுவான் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞரான வாங் பெங், அந்த கார் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தபோதிலும், முறையான அழிப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் நிர்வாகத் தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று சீன ஊடகங்களிடம் தெரிவித்தார். மூடநம்பிக்கையின் காரணமாக காரை சட்டவிரோதமாகப் புதைத்ததற்காக, ஜின் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்டிக்கப்பட்டதாக அங்குள்ள உள்ளூர் குடிமை பணியகம் கூறியுள்ளது. இதற்காக ஜின் குடும்பத்தினர் பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, அகழ்வாராய்ச்சி இடத்தை சுத்தம் செய்தல் மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான செலவுகளை ஈடுசெய்வதுடன், அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com