Rabbit hole syndrome - உங்களுள் எத்தனை பேருக்கு, இந்த ரேப்பிட் ஹோல் சின்ரோம் பற்றி தெரியும்?பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த நோயில் சிக்கி தவிக்கிறார்கள் ரேப்பிட் ஹோல் சின்றோம் என்றால் என்ன, அதனால் என்ன நடக்கிறது, என்பதை பற்றி இங்கு நாம் விளக்கமாக பார்ப்போம்
Rabbitt hole :
முதலில் இந்த முயல், வயல்களில் குழி தொண்டு ,விளையாடுவதை அறிந்து இருக்கிறீர்களா.இந்த முயல் குட்டிகள் என்ன செய்யுமாம், வயல்களில் குழி தோண்டி விளையாடுமாம்,ஒரு குழியை தோண்டி விட்டு உள்ளே போவது வெளியே வருவதும் செய்து கொண்டிருக்கும் அந்த உற்சாகத்திலேயே அதனையே அறியாமல் மிக ஆழமாக குழி தோண்டி வெளியே வர வழி தெரியாமல் மாட்டிகொண்டு மூச்சி முட்டி இறந்து விடும்.
மேலும் படிக்க: தாய், தந்தையை கண்டுக்காம விட்டா.. என்னென்ன நடக்கும் தெரியுமா? அதிர வைக்கும் "அறிவியல்" உண்மைகள்!
Rabbit hole syndrome என்றால் என்ன:அதே போல தான் பெண்கள் , ஏதோ ஒரு விஷயத்தில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
உதாரணமாக கணவன் எவ்ளவு துன்புறுத்தினாலும் குழந்தைகள், குடும்பம், என்ற சூழலில் சிக்கித்தவிக்கின்றனர் .வேலைக்கு செல்லும் இடைகளில் எவ்ளவு கஷ்டங்கள், இருந்தாலும் குடுபத்தின் சூழலுக்காக, பொறுத்துக்கொண்டு வேலை செய்கின்றனர் .
இது போல தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும், அன்பினாலோ ,எதிர்கொள்ள முடியாததினாலோ ,அல்லது கட்டாயத்தினாலோ ,கடமையினாலோ, பொறுத்துக்கொள்ளும் பெண்களின் மன நிலை என்பது அந்த முயலை போல, ஒரு குழிக்குள் சிக்கி தவிக்கிறது.
மேலும் படிக்க:இ.பி.எஸ் ஆடும் "சதுரங்க" ஆட்டம்! ஸ்டாலின் போட்ட கணக்கு பொய்யாச்சா? இது லிஸ்ட்லயே இல்லையே!
ஆய்வின் முடிவுகள்:
ஒரு தனியார் அறிவியல் நிறுவனத்தி ஆய்வு படி, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டோரின், எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகம், என ஆய்வுகளின் முடிவு தெரிவிக்கிறது.
இதை பற்றி மேலும் ஆராய்ந்த போது ,மனநல மருத்துவர்கள் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்கள், இது போன்ற ரேப்பிட் ஹோல் சின்ட்ரோமில் சிக்கித்தவிப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க:ஷூ"-வை மாற்ற மறந்த கொள்ளையர்கள்.. கனகச்சிதமாக தட்டித் தூக்கிய இன்ஸ்பெக்டர் "பாண்டியன்" - என்கவுன்ட்டர் பின்னணி!
மருத்துவர்களின் பரிந்துரை :
மனநல மருத்துவர்கள் இந்த ரேப்பிட் ஹோல் சின்ட்ரோமில் இருந்து விடுபட, பல்வேறு அறிவுரைகளை கூறுகின்றனர் .
ஏதோ ஒரு காரணத்தால் ஒரு விஷயத்தில் நீங்கள் சிக்க தவிப்பதாக நினைத்தல், உடனே அதில் இருந்து வெளியே வாருங்கள்.
தினமும் உடற்பயிற்சி, யோகா, போன்றவரை மேற்கொள்ளவதன் மூலம் உங்கள் மனம் ஒரு நிலையாக இருக்கும் .
அவ்வப்போது உங்கள் குடும்பத்தோடு, அல்லது உங்களுக்கு பிடித்தவரோடோ, இயற்கையான இடங்களுக்கு செல்வது உங்களையே அமைதியான மனநிலையில் வைக்கும் .
நீங்கள் ஏதேனும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் போது மனதிற்கு பிடித்த ஏதாவது செய்தல் மனம் ஒரு தெளிவு பெரும் என்கின்றனர்
எனவே பெண்களே, இதனை எல்லாம் அறிந்து இனியாவது, இந்த ரேப்பிட் ஹோல் சின்ரோமில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்