பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்து சீருடைகள் தயாரிப்பு..!

Published on
Updated on
1 min read

இந்தியாவில் மறுசுழற்ச்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. 

மறுசுழற்ச்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சீருடைகள் தயாரிக்கப்பட்டு இந்திய ஆயில் நிறுவனத்தின் மூலமாக சிலிண்டர்  வினியோகம் செய்யும்  ஊழியர்களுக்கும் பெட்ரோல் பல்க் ஊழியர்களுக்கும் சீருடைகளை களாக இன்று வழங்கினார்கள்.
வருடத்திற்க்கு 100 மில்லியன் மறுசுழற்ச்சி. செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக சீருடைகள் தயாரிக்கபடுவது இந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக ஏற்படும் சுகாதார சீர்கேடு தடுக்கவும் இது உதவுவாக தெரிவிக்கின்றனர்.  மறுசுழற்ச்சி செய்யபட்ட   28 பாட்டில்கள் மூலம் ஒரு உடை தயாரிக்க முடியும் என கூறுகின்றனர்.
இந்நிகழ்வில் நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் . மற்றும் மூத்த மேலாளர் மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு சீருடைகளை வழங்கினர் இந்நிகழ்வை இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் தொடங்கி வைத்தார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com