பிரசவத்திற்கு பிறகான உடலுறவு…! வலியை உணர்கிறீர்களா!? பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!

நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் சரி, கர்ப்பத்திற்குப் பிறகு உடலுறவு பற்றி ...
sex after pregnancy
sex after pregnancy
Published on
Updated on
2 min read

ஒரு நல்ல இல்லறத்தின் விளைவுதான் குழந்தை பேறு. ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு சவாலான ஒன்று. மேலும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் வடிவமைப்பே வேறு மாதிரி ஆகிவிடும், அந்த நேரத்தில் அவர்களிடம் கூடுதல் அக்கறையும் கவனமும்  காட்ட வேண்டும். பிரசவத்திற்கு பிறகான உடல் உளவியல் மாற்றங்களை எவ்வாறு கையாளுவது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். 

பிரசவத்திற்குப் பிறகு உடல் மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்கள் வாழ்விலும் வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் உடலுறவு பற்றிய எண்ணத்தை உற்சாகப்படுத்தாமல் குறைக்க வாய்ப்புண்டு.. வலி, தூக்கமின்மை மற்றும் குழந்தையைப் பராமரிப்பது அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் காலப்போக்கில், பெரும்பாலான மக்கள் மீண்டும் உடலுறவு கொள்ள துவங்குவார்கள். இது மிக இயல்பான ஒன்று.

நீங்கள் எந்த  மனநிலையில் இருந்தாலும் சரி, கர்ப்பத்திற்குப் பிறகு உடலுறவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.  பிரசவத்தின்போது, பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்படலாம். எனவே உடனே உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்.

  • பிறப்புறுப்பு வறட்சி.

  • வலி.

  • குறைந்த பாலியல் இச்சை

உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உங்கள் யோனியை வறண்டதாகவும் வலி நிறைந்ததாகவும்  உணர வைக்கும். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் அதிக கவனம் தேவை.. அந்த மாற்றங்கள் உடலுறவை அசௌகரியமாக மாற்றக்கூடும்.

பிரசவத்திற்குப் பிறகு வடு திசு உருவாகியிருந்தால், உடலுறவின் போது உங்களுக்கு சிறிது வலி ஏற்படலாம்.. நீங்கள்  எபிசியோடமி செய்து கொண்டால் உடலுறவு  வலியாக இருக்கலாம். இது பிரசவத்தின் போது யோனிக்கும் ஆசனவாய்க்கும் இடையிலான திசுக்களில் ஏற்படும் காயம்.

உடல் உறவை எளிதாக்க சில வழிகள்!

லூப்ரிகண்ட் பயன்படுத்தவும். 

உங்கள் பிறப்புறுப்பு  வறட்சியாக இருந்தால் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதில் சிக்கல் எழலாம், எனவே  லூப்ரிகண்ட் பயன்படுத்தலாம். ஆனால்  உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தாத பிராண்டுகளை பயன்படுத்தலாம்.

யோனி உடலுறவை தவிர்த்து வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள்:

யோனி உடலுறவைத் தவிர வேறு ஏதாவது வகையில் உடலுறவு கொள்வது பற்றி உங்கள் துணையுடன் பேசுங்கள், எடுத்துக்காட்டாக மசாஜ், வாய்வழி செக்ஸ்  பரஸ்பர சுயஇன்பம் பற்றி உங்கள் துணையுடன் கலந்து ஆலோசியுங்கள்.

நிதானமாக கையாளுங்கள்”

பிரசவத்திற்கு பிறகான மன நிலை நிச்சயம் வேறாக இருக்ககூடும் எனவே  அவசரப்பட வேண்டாம். உடலுறவுக்கு நிறைய நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் ஓய்வாகவும் நிம்மதியாகவும் உணரும் நேரத்தைக் கண்டறிந்து செயல்படுங்கள்.

உடலுறவில் ஆர்வம் குறைந்தால் என்ன செய்வது!

குறிப்பாக நீங்கள் ஒரு  குழந்தையுடன் புதிய வாழ்க்கைக்குப் பழகும்போது நிறைய மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் கவர்ச்சியாக உணராமல் போகலாம் அல்லது  உடலுறவு காயப்படுத்தும் என்று நீங்கள் பயந்தால், உங்கள் துணையிடன் கலந்துரையாடுங்கள் . நீங்கள் உடலுறவு கொள்ளத் தயாராகும் வரை, நீங்கள் வேறு வழிகளில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் பாசத்தைக் காட்டவும் முயற்சிக்க விரும்பலாம். உதாரணமாக, காலையில் சில நிமிடங்கள் அல்லது குழந்தை தூங்கச் சென்ற பிறகு கூட, குழந்தை இல்லாமல் தனிமையில் இருக்கும்நேரத்தை பயன்படுத்தலாம். பிரசவத்திற்குப் பிறகு நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகளைக் கவனியுங்கள். அதற்கு ஏற்ப செயல்படுங்கள். உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடலாம். ஆனாலும் நிதானமாக கையாளுவது மிக அவசியமானது ஆகும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com