கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? நிம்மதியா தூங்கி வருஷக்கணக்கு ஆச்சா? இதோ கடனில் இருந்து தப்பிக்க 5 சூப்பர் வழிகள்!

கொஞ்சம் பொறுமையா இருந்து காசு சேர்த்து வச்சு ஒரு பொருளை வாங்கும்போது அதுல கிடைக்கிற சந்தோஷமே தனி...
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? நிம்மதியா தூங்கி வருஷக்கணக்கு ஆச்சா? இதோ கடனில் இருந்து தப்பிக்க 5 சூப்பர் வழிகள்!
Published on
Updated on
2 min read

இன்னைக்கு இருக்குற உலகத்துல கடன் இல்லாத மனுஷங்களே இல்லைன்னு சொல்லலாம். முன்னாடி எல்லாம் ஒரு அவசரத்துக்கு மட்டும் தான் கைமாத்தா கடன் வாங்குவாங்க. ஆனா இப்போ ஒரு போன் வேணும்னா கூட இஎம்ஐ (EMI), ஒரு பிரிட்ஜ் வேணும்னா லோன் அப்படின்னு நம்மள சுத்தி கடன் வலை விரிஞ்சு கிடக்குது. பேங்க்ல இருந்து போன் பண்ணி உங்களுக்கு லோன் இருக்குன்னு சொல்லும்போது அது ஒரு வரப்பிரசாதம் மாதிரி தோணும், ஆனா அதுல கையெழுத்து போட்டதுக்கு அப்புறம் தான் தெரியும் அது ஒரு பெரிய சுமைன்னு. மாசம் பிறந்தாலே பாதி சம்பளம் வட்டிக்கும் அசல் கட்டுறதுக்குமே போயிடுதுன்னா அப்புறம் நாம எதுக்காக உழைக்கிறோம்னே தெரியாம போயிடும். இந்த கடன் தொல்லையில இருந்து மீண்டு வர்றதுக்கு முதல்ல நாம மனசளவுல தைரியமா இருக்கணும். கடன் வாங்குறது தப்பு இல்ல, ஆனா அந்த கடனை கட்டுறதுக்கு மறுபடி இன்னொரு இடத்துல கடன் வாங்குறது தான் இருக்குறதுலயே பெரிய தப்பு.

கடனை அடைக்கிறதுக்கு முதல்ல நீங்க பண்ண வேண்டியது ஒரு சின்ன கணக்கு போடுறதுதான். ஒரு பேப்பர் எடுத்து உங்களுக்கு யார் யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டியிருக்கு, அதுக்கு எவ்வளவு வட்டி கட்டுறீங்கன்னு தெளிவா எழுதி வைங்க. இதுல இருக்குறதுலயே எது அதிக வட்டியோ, அந்த கடனை முதல்ல அடைக்க பாக்கணும். உதாரணத்துக்கு இந்த கிரெடிட் கார்டு கடன் அப்புறம் மீட்டர் வட்டிக்கு வாங்குறது எல்லாம் ரொம்ப ஆபத்தானது. உங்க கைல இருக்குற சின்ன சின்ன சேமிப்பை வச்சோ இல்லனா தேவையில்லாத ஏதாச்சும் சொத்து இருந்தாலோ அதை வித்தாவது முதல்ல இந்த அதிக வட்டி கடன்களை முடிங்க. வட்டி குறைய குறைய தான் உங்களால அசலை தொட முடியும். ஒரு கடனை முடிக்கும்போது கிடைக்கிற அந்த நிம்மதி உங்களுக்கு அடுத்த கடனை அடைக்கிற தெம்பை கொடுக்கும்.

அடுத்து நாம பண்ண வேண்டிய முக்கியமான விஷயம் நம்ம செலவுகளை கட்டுப்படுத்துறது. கடன்ல இருக்கும்போது நாம ஆடம்பரமா வாழ்றதை கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைக்கணும். ஹோட்டல்ல சாப்பிடுறது, தியேட்டருக்கு போறது, புது துணி எடுக்குறதுன்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு அந்த பணத்தை மிச்சம் பண்ணி கடனை கட்ட பயன்படுத்தணும். இதையெல்லாம் விட முக்கியமானது இந்த கிரெடிட் கார்டை தூக்கி வீசுறதுதான். கைல காசு இருந்தா மட்டும் பொருளை வாங்குற பழக்கத்தை கொண்டு வரணும். "ஆசைப்பட்ட உடனே பொருள் கைல கிடைக்கணும்" அப்படிங்கிற அந்த எண்ணம் தான் நம்மளை கடன்ல தள்ளிவிடுது. கொஞ்சம் பொறுமையா இருந்து காசு சேர்த்து வச்சு ஒரு பொருளை வாங்கும்போது அதுல கிடைக்கிற சந்தோஷமே தனி தான்.

உங்களுக்கு வருமானம் பத்தலனா, ஓய்வு நேரத்துல சின்னதா ஏதாவது ஒரு பார்ட் டைம் வேலை செஞ்சு வருமானத்தை கூட்ட பாருங்க. கிடைக்கிற அந்த எக்ஸ்ட்ரா பணத்தை அப்படியே கடனை கட்ட பயன்படுத்தணும். வீட்ல இருக்குறவங்க கிட்டயும் நிலமையை சொல்லி புரிய வச்சு, எல்லாரும் சேர்ந்து சிக்கனமா இருந்தா சீக்கிரமே கடனை முடிச்சிடலாம். கடன்ல இருந்து ரிலீஃப் ஆன அப்புறம் மறுபடி எந்த காரணத்துக்காகவும் அனாவசியமா கடன் வாங்க மாட்டேன்னு ஒரு சபதம் எடுத்துக்கோங்க. கடன் இல்லாத வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்லுவாங்க. நிம்மதியா ராத்திரி படுத்தா தூக்கம் வரணும்னா கைல காசு இருக்குதோ இல்லையோ, நம்ம தலைக்கு மேல கடன் இல்லாம பாத்துக்கணும். முயற்சி பண்ணா கண்டிப்பா நீங்களும் இந்த கடன் வலையில இருந்து வெளியே வர முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com