திடீரென குறைந்த தங்கம் விலை! நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இன்றைய லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு கிராம் தங்கம் 8,980 ரூபாய்க்கு விற்பனையானது...
Sudden drop in gold prices hits jackpot for jewelers
Sudden drop in gold prices hits jackpot for jewelers
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இன்று அட்சய திருதியை தினம் என்பதால் மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய முக்கியமான நாளில் தங்கம் விலை குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாயும், சவரனுக்கு 480 ரூபாயும் குறைந்து விற்பனையாகிறது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,14,400 ரூபாயாகக் குறைந்துள்ளது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக இருப்பதால், காலையிலிருந்தே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த சிறு விலை குறைவு வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தங்கத்தின் விலை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு கிராம் தங்கம் 8,980 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், இந்த ஆண்டு 14,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது, ஒரே ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சவரன் கணக்கில் பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கம் வாங்குவது சவாலான காரியமாக இருந்தாலும், இன்றைய விலை குறைவு ஒரு பாசிட்டிவான விஷயமாகக் கருதப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த அதே வேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய் என்ற நிலையிலேயே நீடிக்கிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை மாற்றமில்லாமல் தொடர்வது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவதால், வரும் நாட்களில் மேலும் விலை குறையுமா அல்லது உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொதுவாக அட்சய திருதியை போன்ற விசேஷ நாட்களில் நகைக்கடைகளில் சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் செய்கூலி, சேதாரம் போன்றவற்றில் சலுகைகள் அறிவிக்கப்படும். இன்று தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்திருப்பதால், இந்தச் சலுகைகளையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தங்கம் விலை குறைவு காரணமாக நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. மாலை நேரத்திற்குள் இன்னும் அதிகமானோர் தங்கம் வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com