ரூ.20.60 லட்சத்தில் டாடா விங்கர் பிளஸ் அறிமுகம்! முழு விவரமும் இங்கே!

இந்த 9 இருக்கைகள் கொண்ட பிரீமியம் வேன், ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கும்...
Tata winger plus
Tata winger plus
Published on
Updated on
1 min read

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் புதிய வர்த்தக வாகனமான 'டாடா விங்கர் பிளஸ்'ஸை ரூ. 20.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 9 இருக்கைகள் கொண்ட பிரீமியம் வேன், ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கும், சுற்றுலா மற்றும் பயணத் துறைக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

பயணிகளின் வசதிக்காக, சரிசெய்து கொள்ளக்கூடிய ஆர்ம்ரெஸ்டுகளுடன் கூடிய சாய்வான கேப்டன் இருக்கைகள் (Captain Seats) வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பயணிகளுக்கும் தனிப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயின்ட்டுகள் உள்ளன.

விசாலமான கேபின் மற்றும் அதிக லக்கேஜ் வைப்பதற்கான இடம் ஆகியவை நீண்ட பயணங்களை மேலும் சௌகரியமாக்குகின்றன.

இந்த வாகனத்தில் 2.2 லிட்டர் டைகோர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100hp சக்தியையும், 200Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் இன்ஜின், அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம், மோனோகாக் சேஸ் (monocoque chassis) அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இது சிறந்த பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. கார் ஓட்டுவது போன்ற எளிமையான உணர்வை அளிப்பதால், ஓட்டுநர்களுக்கு நீண்ட பயணங்களின்போதும் சோர்வு ஏற்படாது.

டாடா மோட்டார்ஸின் 'ஃப்ளீட் எட்ஜ்' (Fleet Edge) என்ற கனெக்டட் வாகன பிளாட்ஃபார்ம் இந்த வாகனத்தில் உள்ளது. இது நிகழ்நேரத்தில் வாகனத்தைக் கண்காணிக்கவும், வாகனத்தின் நிலை குறித்த தகவல்களைப் பெறவும், வணிக மேலாண்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த புதிய மாடல், பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையில் உள்ள நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com