

மனிதர்களாகிய நமக்கு எப்போதுமே நம் எதிர்காலத்தைப் பற்றியும், நாம் எவ்வளவு காலம் பூமியில் வாழ்வோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஒரு விருப்பம் உண்டு. இதற்காக நாம் ஜோதிடர்களையோ அல்லது கைரேகை நிபுணர்களையோ தேடிச் செல்வது வழக்கம். ஆனால், நம் உடல் எப்போதுமே நமக்குச் சில நுட்பமான சிக்னல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் நம் உடலில் உள்ள சில உறுப்புகளே இண்டிகேட்டர்களாக பயன்பட்டு வருகின்றன. இதில் நாம் அழகிற்காக மட்டுமே பராமரிக்கும் நம் கை விரல் நகங்கள், நம் ஆரோக்கியத்தின் கண்ணாடியாகச் செயல்படுகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். நம் உடலின் உள்ள உறுப்புகளின் செயல்களையும், நாம் எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்வோம் என்பதையும் நம் நகங்களின் வளர்ச்சி மற்றும் வேகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்பது நிபுணர்களின் கருத்து.
பொதுவாக மருத்துவரிடம் சென்றால் உங்கள் கைகளை நீட்டுங்கள் என்று கூறி விரல் நகங்களை பார்ப்பது வழக்கம். நகங்கள் வேகமாக வளர்வது ஒரு மிகச்சிறந்த ஆரோக்கியத்தின் அறிகுறி என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நகங்கள் வேகமாக வளர்வது ஒரு மிகச்சிறந்த ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். பொதுவாக, நாம் நகங்களை வெட்டி எறிந்துவிட்டு, மீண்டும் எப்போது வளர்கிறது என்று கவனிப்பதில்லை.
ஆனால், உங்கள் நகங்கள் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்தால் உங்கள் உடல் மிகவும் இளமையாக இருக்கிறது என்று பொருள். நகங்கள் வேகமாக வளர்வது, உங்கள் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் எந்தவிதச் சோர்வும் இன்றித் துடிப்புடன் செயல்படுவதையே காட்டுகிறது. நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்று சேரும். நகங்களின் வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து ரத்தத்தின் மூலமே கிடைக்கிறது.
வயதாகும்போது ரத்த ஓட்டம் குறைவது இயல்பு.ஆனால் அதே நேரம் நகங்களின் வளர்ச்சியை மட்டுமே வைத்து, நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று கூறிவிட முடியாது. நகங்களின் தோற்றமும் மிக முக்கியம். நகங்களில் வரிகள் விழுவது, வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது அல்லது பள்ளம் விழுவது போன்றவை உடலில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் இண்டிகேட்டர்கள் ஆகும். இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ போன்றவை குறையும்போது நகங்கள் பொலிவிழந்து சொரசொரப்பாக மாறும்.
எனவே நகங்களின் வளர்ச்சியோடு சேர்த்து, அதன் தோற்றத்தையும் கவனிப்பது அவசியம். அதே நேரம், நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வதன் மூலம் நாம் ஆரோக்கியமாக வாழ்வதுடன், நமது நகங்களையும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.