இந்த தலைமுறை பெண்கள் தங்கள் காதலர்களிடம் இருந்து, எதிர்பார்க்கும் கவனிப்பு மற்றும் அன்பு பற்றி பேசினால், அது பல விதங்களில் இருக்கலாம்.
பொதுவா, அவங்க எதிர்பார்க்கிறது ஒரு உண்மையான புரிதல், மரியாதை, மற்றும் அக்கறையதான்.
கவனிப்பு (Care):
இன்றைய கால பெண்கள் சின்ன சின்ன விஷயங்கள கூட கவனிக்கிற, ஒரு பையனை விரும்புறாங்க.
உதாரணமா, அவளுக்கு பிடிச்ச சாப்பாடு என்னனு தெரிஞ்சு, அதை சர்ப்ரைஸா வாங்கி குடுக்குறது, அல்லது அவளுக்கு உடம்பு சரி இல்லைனா, அக்கறையோட கேட்டு பார்த்துக்குறது.
மேலும் படிக்க: விஜய் நடத்திய "closed-door" மீட்டிங்.. வருடிக் கொடுத்தது போதும்.. இனி "அவர்களையும்" வச்சு செய்ய முடிவு!? Scene-னே மாறுதா?
அவளோட அன்றாட உடைகளையும், நகைகளையும், இரசிக்கிறது . அவளுக்கென, இருக்கும் ஓரு தனி பாவனைகளை, கவனிக்கணும்னு, எதிர் பாக்குறாங்க .
அன்பு (Love):
அன்பு என்பது வெறும் வார்த்தை இல்லாமா , செயல்களால காட்டணும்னு, நினைக்கிறார்கள்.
அவளோட கனவுகளுக்கு, சப்போர்ட் பண்ணி, அவளோட சந்தோஷத்துக்கு முக்கியத்துவம், குடுக்குற ஒரு பையனை எதிர்பார்ப்பாங்க.
அவளுக்கு ஸ்பேஸ் குடுத்து, அதே சமயம் தேவைப்படும்போது, பக்கத்துல இருக்கணும்.
தனக்கு மட்டும் இல்லாம தங்களை சார்த்தவங்க கிட்டயும், அதே அன்போட இருக்கனும், என எதிர் பாக்குறாங்க.
நம்பிக்கை மற்றும் புரிதல் (Trust and Understanding):
இப்போ பொண்ணுங்க தங்கள் காதலன்கிட்ட நம்பிக்கையும், தங்கள புரிஞ்சுக்குற மனசும் எதிர்பார்க்குறாங்க.
அவங்க சொல்றத கேட்டு, அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கணும்.
தன்னோட பேச்சுக்களை ஜட்ஜ் பண்ணாம, காது குடுத்து கேட்டாலே போதும், என ஆசைப்படுறாங்க. காரணம்.
மேலும் படிக்க: மாட்டிக்கிட்ட பங்கு! "என்ன விட்டு அவ கூட Honey Moon போயிட்டு வரையாடா" கோவை விமான நிலையத்தை அலறவைத்த பெண்
இப்போல்லாம் நம்ம எல்லாரும் ஏதோ ஒண்ணுத நோக்கி ஓடிகிட்டே இருக்கோம்.உறவுகளுக்கு மதிப்பு குடுக்குறதில்ல, அந்த மாறி இல்லாம அவளுக்காக நேரத்தை ஒதுக்குற ஒருத்தர இருக்கனும், என்று யோசிக்கிறாங்க .
ரொமான்ஸ் (Romance):
கொஞ்சம் சினிமாட்டிக் டச் இருந்தாலும் பரவாயில்லை —சின்ன சின்ன டெக்ஸ்ட் மெசேஜ், நடு ரோட்டுல ஒரு செல்ஃபி எடுத்து அனுப்புறது, அல்லது அவளுக்கு பிடிச்ச பாட்டை பாடி காட்டுறது மாதிரி.
சின்ன சின்ன விஷயங்களையும் எக்ஸ்பிரஸ் பண்றது, அவளுக்கு புடிச்ச மேனரிசமோட இருக்கனும் என நினைக்குறாங்க .
மொத்தத்தில், இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க ஒரு பையன்கிட்ட அன்பு, கவனிப்பு, மரியாதை, மற்றும் சுதந்திரம் கலந்த ஒரு பாண்ட் எதிர்பார்க்குறாங்கா.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்