அமைச்சர் மா.சுப்ரமணியுடன் ஜாகிங் சென்ற ஐக்கிய அமீரக அமைச்சர்

அமைச்சர் மா.சுப்ரமணியுடன் ஜாகிங் சென்ற ஐக்கிய அமீரக அமைச்சர்

Published on

ஐக்கிய அரபு அமீரகத்துடன் தமிழ்நாடு பல்வேறு ஓப்பந்தங்கள் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி இன்று சென்னையில் நடைபெறும் இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் தொழித்துறை அமைச்சர்களை ஐக்கிய அரபு அமீரக பொருளாதார அமைச்சர் சந்தித்தார்.இதனையடுத்து அவர் சென்னை பெசண்ட் நகரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்புரமணியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். மேலும், நடைப்பயிற்சி அவசியத்தை உணர்த்தும் வாசகங்களுடன் செல்ஃபி எடுத்தும் உற்சாகமடைந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com