தாய்லாந்தின் டாப் 8 கடற்கரைகள்.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஃபீலிங்

இங்கு ஒவ்வொரு கடற்கரையும் ஒரு தனித்துவமான அனுபவத்தை தருது. நிம்மதியா ரிலாக்ஸ் பண்ண விரும்புறவங்க, நீர் விளையாட்டு ஆர்வலர்கள், பார்ட்டி மூடுல இருக்கவங்க, எல்லாருக்கும் இங்க ஒரு கடற்கரை காத்திருக்கு.
best beaches in thailand
best beaches in thailand
Published on
Updated on
2 min read

தாய்லாந்துன்னாலே ஒரே ஜாலி வாழ்க்கை தான்.. அதன் பளபளப்பான நீல நிற கடல் ஒரு கனவு விடுமுறைக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டது. இங்கு ஒவ்வொரு கடற்கரையும் ஒரு தனித்துவமான அனுபவத்தை தருது. நிம்மதியா ரிலாக்ஸ் பண்ண விரும்புறவங்க, நீர் விளையாட்டு ஆர்வலர்கள், பார்ட்டி மூடுல இருக்கவங்க, எல்லாருக்கும் இங்க ஒரு கடற்கரை காத்திருக்கு.

1. ரயிலே கடற்கரை, கிராபி

கிராபி மாகாணத்துல இருக்குற ரயிலே கடற்கரை ஒரு தனி உலகம் மாதிரி. படகு மூலமா மட்டுமே செல்ல முடியுற இந்த இடம், சுண்ணாம்பு கல் மலைகளாலும், பச்சை பசேல்னு காடுகளாலும் சுத்தி வளைக்கப்பட்டிருக்கு. இங்க நிம்மதியா சூரிய ஒளியில் குளிச்சு ரசிக்கலாம், இல்லனா பாறை ஏறுதல் (ராக் கிளைம்பிங்) மாதிரி அட்வென்ச்சர்ஸ் ட்ரை பண்ணலாம். மாலை நேர சூரிய அஸ்தமனம் இங்க செம அழகு, பார்க்கவே மனசு அள்ளும்.

2. மாயா விரிகுடா, கோ பி பி லே

‘தி பீச்’ படத்துல லியோனார்டோ டிகாப்ரியோ நடிச்ச மாயா விரிகுடா, உலகப் புகழ் பெற்ற கடற்கரை. சமீபத்துல இயற்கை பாதுகாப்பு காரணமா மூடப்பட்டு, இப்போ மறுபடி திறக்கப்பட்டிருக்கு. இந்த கடற்கரை இப்போ முன்னை விட அழகா, அமைதியா இருக்கு. காலையில் சீக்கிரம் போனா, கூட்டமில்லாமல் இயற்கையை ரசிக்கலாம்.

3. வெள்ளை மணல் கடற்கரை, கோ சாங்

குடும்பத்தோடு ட்ரிப் போறவங்களுக்கு இது செம ஆப்ஷன். கோ சாங் தீவுல இருக்குற இந்த கடற்கரை, உணவு விடுதிகள், தங்குமிடங்கள், கடைகள் எல்லாம் அருகிலேயே இருக்கு. நீர் அமைதியா இருப்பதால், குழந்தைகளுக்கு ஏற்றது. மெதுவா நடந்து, கடற்கரையோரம் உணவு சாப்பிடலாம்.

4. ஃப்ரீடம் கடற்கரை, புகெட்

புகெட்டின் கூட்டமான இடங்களை விட்டு, கொஞ்சம் அமைதி தேடுறவங்களுக்கு ஃப்ரீடம் கடற்கரை ஒரு ரகசிய இடம். படகு அல்லது சற்று கடினமான மலை ஏறுதல் மூலமா இங்கு செல்லலாம். தெளிவான நீர், கூட்டமில்லாத சூழல் இதை ஸ்பெஷலா ஆக்குது. ஸ்நோர்க்கெலிங் பண்ணவும் இது சிறந்த இடம்.

5. பாட்டில் கடற்கரை, கோ பாங்கன்

கோ பாங்கன்னு சொன்னதும் புல் மூன் பார்ட்டி நியாபகத்துக்கு வரும், ஆனா பாட்டில் கடற்கரை அப்படி இல்ல. இது ஒரு அமைதியான, கூட்டமில்லாத இடம். கடல் சத்தம், சில குடிசைகள், ஹம்மாக் மட்டுமே இங்க இருக்கு. நிம்மதியா ரிலாக்ஸ் பண்ண விரும்புறவங்களுக்கு இது சொர்க்கம்.

6. ஆவோ நாங் கடற்கரை, கிராபி

ஆவோ நாங் கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கு செம வசதியான இடம். இங்கிருந்து தீவு சுற்றுலாக்கள், உணவு விடுதிகள், கடைகள் எல்லாம் எளிதாக அணுகலாம். சூரிய அஸ்தமனம் இங்க ஒரு மறக்க முடியாத அனுபவம், ஆரஞ்சு-பிங்க் நிற வானத்தை கடற்கரையில் இருந்து ரசிக்கலாம்.

7. சைரி கடற்கரை, கோ டாவோ

கோ டாவோவில் இருக்குற சைரி கடற்கரை, நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம். ஸ்கூபா டைவிங், ஸ்நோர்க்கெலிங் மாதிரி நீர் விளையாட்டுகளுக்கு இது பிரபலம். இரவு நேரத்தில் கடற்கரை பார்கள், ஃபயர் ஷோக்கள், கஃபேக்கள் இதுக்கு ஒரு உற்சாகமான வைப் கொடுக்குது.

8. சன்ரைஸ் கடற்கரை, கோ லிபே

கோ லிபேவில் இருக்குற சன்ரைஸ் கடற்கரை, காலை எழுந்து சூரிய உதயத்தை பார்க்க விரும்புறவங்களுக்கு செம. அமைதியான நீர், ஸ்நோர்க்கெலிங் பண்ணுவதற்கு ஏற்ற இடம். காதல் ஜோடிகளுக்கு இது ஒரு ரொமாண்டிக் ஸ்பாட், இல்லனா ஒரு புத்தகத்தோடு ரிலாக்ஸ் பண்ணவும் இது நல்ல இடம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com