
‘காதல் கடக்கும்போது கசக்கும் .. கடந்த பின் இனிக்கும்’ - இது இயக்குனர் ராமின் கவிதை வரிகளில் ஒன்று. ஆம், காதல் உறவு எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு வலி நிறைந்த ஒன்று.
எல்லா காதலும் எல்லா காதலர்களும் வலியோடுதான் வாழ்கிறார்களா? என்றால் அப்படியல்ல. சாப்பிடுவது, தூங்குவது போல காதலும் ஒரு அனிச்சை செயல். ஒரு நல்ல சாப்பாடு எப்படி உங்கள் நாளை மகிழ்வாக்குமோ காதலும் அப்படிதான் உங்கள் வாழ்வை மகிழ்ச்சியுடன் நடத்த ஒரு முயற்சி. காதல் இரு மனிதர்கள், ‘அன்பு நிறைந்த மனிதர்களாக மனித தன்மையுடன் வாழ்வதற்கான கூட்டு முயற்சி. ஒருவர் மட்டும் போராடினால் ஒன்றுமே செய்ய இயலாது. காதலும் காலமும் ஒன்று அதற்கு நிலைத் தன்மை என்றெல்லாம் ஒன்று கிடையாது. ஆனால் இந்த முரண்கள் நிறைந்த இச்சமூகம் காதலையும் காதலர்களையும் அதன் இயல்பில் இருக்க விடுவதே இல்லை.
அந்த இயல்பை உடைத்து, சமூக சிக்கல்களை தாண்டி இணையும்போது காதலர்கள் தங்கள் ‘ஈகோ’ -விடம் காதலை பலிகொடுத்துவிடுகின்றனர்.
எத்தனையோ காதலர்கள் வெறும் சொத்தையான காரணங்களுக்காக பிரிந்துள்ளனர், வேறு சில காதலர்கள் விலகிப்போவதற்கு எவ்வளவோ தார்மீக காரணங்கள் இருந்தாலும் அந்த துன்பத்தில் உழல்வதையே விரும்புகின்றனர்.
ஏன் உறவு ‘toxic’ -ஆக மாறுகிறது!?
நல்ல முறையில் துவங்கும் காதல் ஏன் காலப்போக்கில் மோசமடைகிறது என்ற பல கேள்விகள் நமக்கு எழும்..எந்த இரண்டு மனிதர்கள் ‘ஒரே இடத்தில் சேர்ந்து வாழும் போது’ இயல்பிலேயே வன்முறை இருக்கத்தான் செய்கிறது, அதுவும் இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்வியலில் அதிக அளவு உறவு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
மேலும் உங்கள் பார்ட்னர் - எப்படிப்பட்டவர் என்பதை பொருத்தும் உங்கள் உறவில் சிக்கல்கள் எழலாம், காதலிக்கும் காலத்தில் நமக்கு பார்ட்னர் -டம் பிடித்த அனைத்தும் லிவ்-இன் -லோ அல்லது திருமணத்தின் போதோ மாறலாம். மேலும் நீண்ட நாள் பழக்கம் கூட ஒரு தொய்வை உண்டாக்கலாம்.
சில சமயங்களில் சண்டை முற்றி, கைகலப்பு வரை கூட செல்லலாம். ஆனால் அந்த சூழலுக்கு உங்கள் உறவை நீங்கள் எடுத்து செல்லாமல் இருப்பது நல்லது. மேலும் மரியாதை குறைவான, தரம் தாழ்ந்த கருத்துக்களை வைத்து சண்டை ஏற்படும்போது அந்த உறவு பாழாகிவிட்டது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம்.
மேலும், சில நேரங்களில் இந்த உறவில் எதுவுமே மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் மட்டுமே அதிகளவு உழைப்பை போடுவதாக உங்களுக்கு தோன்றலா, எதோ கட்டத்தில் மிக சோர்வாக உணர்வீர்கள் அந்த சமையத்தில் அதிலிருந்து வெளியேறுவது நல்லது. ஆனால் வெளியேற முடியாது. சொல்வதை விட செயல் மிகக்கடினம்.
‘Toxic’ -உறவிலிருந்து ஏன் வெளியேற முடியவில்லை!?
ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் அதற்கு பழக்கப்பட்டு விட்டீர்கள், மேலும் உங்களுக்கு அதிலிருந்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அதிலிருந்து மீள் வதற்கான முயற்சியை தனி னபதான் எடுக்க வேண்டும்.
இதுவே ஒரு உளவியல் சிக்கல்தான், உண்மையில் சொல்லப்போனால், ‘நீங்களே அந்த உறவின் வன்முறைக்கு பழக்கப்பட்டு, அந்த வலியை enjoy செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்” ஆனால் இது ஆரோக்கியமான நடைமுறை அல்ல.
எப்படி உறவை மேம்படுத்துவது!?
காதல் உறவுக்கு நல்ல உரையாடல் மிக அவசியம். உங்கள் துணையுடன் நீங்கள் நிகழ்த்தும் உரையாடல்தான் உங்களால் காதல் வாழ்வை மேம்படுத்தும்.
தனிப்பட்ட நபரின் மிக முக்கிய விழுமியங்களில் ஒன்று மரியாதையை - எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் தனிப்பட்ட மனிதரின், நேரத்தை , உணர்வை, வேலையை மதிக்க வேண்டும். இந்த உலகில் யாரும் எதிராக மேலானவர்கள் அல்ல கீழானவர்கள் அல்ல. அந்த புரிதலை இருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நேரம் ஒதுக்குங்கள். முடிந்த அளவுக்கு உங்கள் துணையுடன் இனிமையான நேரங்களை செலவிடுங்கள். கசப்பான நேரங்களை நிச்சயம் அவர்களோடு கழியுங்கள். துன்பமான நாட்களில் நாம் மிக மோசமான மன நிலையில் இருப்போம் இனியருக்கும் அதே நிலைதான், இந்த நேரங்களை எவ்வாறு கையாளுகிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம்.
அன்பும், மரியாதையும், நட்புறவுமே காதலை காப்பாற்றும்…
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.