

காதல் கொண்ட இணையரின் வாழ்க்கையில் ஆரோக்கியமாக பின்பற்றப்படவேண்டிய ஒரு நடைமுறை என்றால் அது உடலுறவுதான். ஆனால் காதலில் அதையும் தாண்டிய சில சுவாரசியமான விஷயங்கள் உண்டு. நீங்கள் ஒருவர் மீது உடல் மற்றும் மன ரீதியான பிணைப்பில் இருக்கும்போது, உங்களின் ஹாப்பி ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கின்றன. மேலும் உங்கள் மன மற்றும் உடலில் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படி காதல் கொண்ட இணையரின் வியர்வை வாசம் உங்களை எப்படி ஆட்கொள்கிறது. மேலும் அதற்கு பின்னணியில் உள்ள உளவியலை காண்போம்
பெரும்பாலும் வியர்வை என்பது, மிகவும் ‘pleasent’ ஆன ஒரு விஷயமாக எல்லோரும் பார்ப்பதில்லை. சிலருக்கு தங்களின் வியர்வை வாசனையே கூட பிடிக்காமல் இருக்கும். உங்கள் துணையின் வாசனையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? மேலும் சிலர் தங்களின் துணையின் வியர்வை படிந்த ஆடைகளை விரும்புவர். நமது மூளையில் சிலரின் வாசனை நினைவுகளாக பதிந்திருக்கும். எடுத்துக்காட்டாக, காலையில் சட்டினி தாளிக்கும் வாசனை உங்களுக்கு அன்றைய நாளின் துவக்கத்தை நினைவுபடுதலாம், அவ்வாறே மழை, பூக்களின் வாசனையும் உங்கள் நினைவுகளோடு கலந்திருக்கின்றன.
சமீபத்தில் கிட்டத்தட்ட 1 வருடமாக ஒன்றாக வாழும் இணையர்களுக்கு இடையில் ஒரு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது, அந்த ஆய்வில் ஈடுபட்ட நபர், தனது துணையின் வாசனை தன்னை மகிழ்ச்சியடையச் செய்து அமைதியாக உணர வைக்கிறது என்று கூறினார் "அவளுடைய வாசனையைப் பிடிக்கும்போது நான் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், வீட்டில் ஒருவித சூடான தெளிவற்ற உணர்வும் இருக்கிறது. காரணம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் வாசனை வீசும் விதம் தான் நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன்." என கூறியுள்ளார்.
இதை உளவியல் ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.
1995 -ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்கள் கலவியில் ஈடுபடும்போது, தங்கள் துணையின் வாசனையை மிகவும் ரசிப்பதாக சொல்லப்பட்டது.
மேலும், பெண்களுக்கு தங்கள் இணையின் அக்குள் வாசனை, ‘மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியான உணர்வை தருவதோடு, அவர்களின் ‘mood swings’ குறைவதாகவும் சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மெக்பர்னி, ஷூப் மற்றும் ஸ்ட்ரீட்டர் ஆகியோரால் 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 87% பெண்களும் 56% ஆண்களும் தங்கள் துணையின் ஆடைகளை வேண்டுமென்றே முகர்வதாக தெரிவித்தனர், மேலும் ஆண்களை விட (27%) அதிகமான பெண்கள் தங்கள் துணையின் ஆடைகளுடன் தூங்குவதை விரும்புவதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுகள் எல்லாம் சொல்லுவது, காதல் நிறைந்த உங்கள் துணையின் வாசனை பதட்டம் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்க உதவுகிறது, இதன் மூலம் இணையருடனான உணர்ச்சி பிணைப்பை வலுப்படுத்துகிறது. ஒரு துணையின் வாசனை உருவாக்கக்கூடிய ஆறுதல் உணர்வு உங்கள் காதலை மேலும் வலுப்படுத்துகிறதாம். காதலில் வாசனையும் முக்கியத்துவம் வாய்ந்தது..!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.