மக்கள் புகார் தெரிவிக்க, தொடர்பு எண்கள் வெளியீடு!

மக்கள் புகார் தெரிவிக்க, தொடர்பு எண்கள் வெளியீடு!

பொதுமக்களின் குறைகளை தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்களை அமைச்சர் கே. என்.நேரு வெளியிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்து கொண்டார். 

அமைச்சர் கே. என்.நேரு, சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும், நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு தாய் சேய் நல கண்காணிப்பு பெட்டகங்களையும் வழங்கியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணும் வகையில் whatsapp எண்களை அமைச்சர் கே. என் நேரு வெளியிட்டார். 

அதன்படி சேலம் மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை, குடிநீர், வடிநீர் கால்வாய் மற்றும் சுகாதாரம் தொடர்பான புகார்களை 8300062992 அல்லது 8300383003 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க || நாளை முதல் பார்ம் டி மற்றும் செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!