லோகேஷின் லியோவில் இணைந்த மிஷ்கின்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் மிஷ்கின் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

லோகேஷின் லியோவில் இணைந்த மிஷ்கின்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படமானது, அவரது பிரத்யேக சினிமா யூனிவெர்சில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் இந்த படத்தில் நடிப்பதால் ரசிகர்களுக்கு இந்த படம் மேலான ஆர்வம் தலையோங்கி இருக்கிறது.

மேலும் படிக்க | இலங்கை பெண்ணுடன் திருமணமா? - சிம்பு தரப்பு மறுப்பு!

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்து சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் தான் மிகவும் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் படிக்க | ”தசரா” படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்...

இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வர, இயக்குனர் மிஸ்கின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தாஜ் மகாலை இடித்துத் தள்ளுங்கள் - பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவின் சர்ச்சை பேச்சு...