2023 வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு...!

நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆண்டுதோறும் நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டில் வேதியியல் துறையில் குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய 3 பேருக்கு நோபல் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 3-ம் தேதி எலெக்ட்ரானிக் பொருண்மை துறையில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த பியரி அகோஸ்டினி, ஜெர்மனியை சேர்ந்த பெரென்க் க்ரௌஸ், ஆனி ஹுல்லியர் ஆகியோருக்கு நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

கடந்த 2-ம் தேதி  மருத்துவத் துறையில் நியூக்ளியோசைடு  மூலக்கூறுகள் மாற்றம் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்னும் பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com