இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சிக்கல் அங்குள்ள அமைச்சர்க ளையும் விட்டு வைக்கவில்லை. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த சில கூட்டணி அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த எம்பிக்கள் அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்தி உள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட விமல் வீரவன்ச, புத்த மத தலைவர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக மக்கள் எரிவாயு வரிசைகளிலும் எரிபொருள் வரிசைகளிலும் மருந்து வரிசைகளிலும் இருந்த நேரத்தில் தான் நாட்டுக்கு எதிரான இந்த அனைத்து உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டதாக கூறியுள்ளார். நாட்டிற்குள் தற்போது மிகவும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மோசமாக மாற இடமளிக்க முடியாது என்ற நிலையில்தான் உண்மை நிலவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்ததாகவும் விமல் கூறியுள்ளார்.