30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த ராணுவ வீரர்கள்...

மியான்மரில் அப்பாவி மக்கள் 30 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றதோடு அவர்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த ராணுவ வீரர்கள்...
Published on
Updated on
1 min read

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி மியான்மரை கைபற்றியதாக சொல்லப்படுகிறது.அவ்வப்போது தொடங்கிய ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த 1500 க்கும் மேற்பட்ட மக்களை இதுவரை ஈவு இரக்கமின்றி அவர்கள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை கைது செய்து அவர்களை சித்ரவதை செய்வதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மியான்மரில் கிழக்கு பகுதியில் உள்ள கயா மாகாணத்தில் மோ சோ எனப்படும் கிராமத்தில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 30 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுகொன்று அவர்களின் உடல்களை தீவைத்து எரித்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இது குறித்து நேரில் பார்த்த சாட்சியாக ஒருவர் கூறுகையில்,

மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் ராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையேயான ஆயுத மோதலில் இருந்து மக்கள் தப்பித்து செல்ல முயற்சித்த போது ராணுவ விரர்கள் அவர்களை கைது செய்து கை கால்கள் என அனைத்தையும் கட்டி சுட்டு கொன்றதாகவும் பெட்ரோலை ஊற்றி எரித்ததாகவும் சொல்லப்பட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com