இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.. வருவாயை அதிகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில்,  வருவாயை அதிகரிக்கும் மசோதா, அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.. வருவாயை அதிகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்
Published on
Updated on
1 min read

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே செய்த தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமாக வாங்கப்பட்ட கடன்கள் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டன. பெரும்பாலான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விரைவில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்ற நிலை நிலவுகிறது.

இந்நிலையில், இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவை பசில் ராஜபக்சே தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை ரூபாயில் ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய்  ஈட்டுபவர்களுக்கு இனி 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தனிநபர்கள், நிறுவனங்களுக்கும் கூடுதல் வரி பொருந்தும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வருவாயை அதிகரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com