
மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்புச் சலுகையை முழுமையாகப் பொதுமக்களுக்கு வழங்கப்போவதாக, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (TKM) அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. 2.0 தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன் பலன்கள், செப்டம்பர் 22, 2025 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்ட கார்களுக்கும் கிடைக்கும்.
இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. வரீந்தர் வதவா, "மத்திய அரசின் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது வாடிக்கையாளர்களுக்குச் சொந்த வாகனம் வாங்குவதைச் சாத்தியமாக்குவதோடு, ஆட்டோமொபைல் துறையில் நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்த நடவடிக்கை வலுவான உத்வேகத்தையும், தேவையை மேலும் துரிதப்படுத்தும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
மேலும், "ஒரு வெளிப்படையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக, இந்த சலுகைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை அனைவருக்கும் வழங்குவதற்கும், தேவை அதிகரிப்பதற்கும் இது உதவும். மேலும், நிலையான வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதற்கும் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
டொயோட்டா வாகனங்களின் விலை குறைப்பு விவரங்கள்:
மாடல் அதிகபட்ச விலை குறைப்பு (ரூபாயில்)
க்ளான்சா (Glanza) - ₹85,300 வரை
டைசோர் (Taisor) - ₹1,11,100 வரை
ரூமியன் (Rumion) - ₹48,700 வரை
ஹைப்ரைடர் (Hyryder) - ₹65,400 வரை
க்ரிஸ்டா (Crysta) - ₹1,80,600 வரை
ஹைக்ராஸ் (Hycross) - ₹1,15,800 வரை
ஃபார்ச்சூனர் (Fortuner) - ₹3,49,000 வரை
லெகெண்டர் (Legender) - ₹3,34,000 வரை
ஹிலக்ஸ் (Hilux) - ₹2,52,700 வரை
கேம்ரி (Camry) - ₹1,01,800 வரை
வெல்ஃபயர் (Vellfire) - ₹2,78,000 வரை
வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான டொயோட்டா வாகனத்தின் சரியான விலையை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.