அஞ்சலகம் மற்றும் வங்கிகளை கடந்து, மேலும் பல வழிகளில் நம்மால் பணத்தை சேமிக்க முடியும். மேலும் அதில் சில வழிகளில் பணத்தை சேமிக்கும்போது நமக்கு பெரிய அளவில் லாபமும் கிடைக்கிறது. ஆனால் அதில் ரிஸ்க் என்பதும் சற்று அதிகம் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.
இணைய வழியில் பணத்தை சேமிப்பது என்பது பெரும்பாலும் ஷேர் மார்க்கெட் என்னும் முறையை பயன்படுத்தியே நடைபெறுகிறது. இந்த பதிவில் ஷேர் மார்க்கெட்டில் செயல்படும் ஒரு Mutual Fund முறையை பற்றித்தான் பார்க்கவுள்ளோம். ஆகவே ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யும் முன், சில காலம் அது குறித்து நன்கு ஆராய்ச்சிகள் செய்து, அதன் பிறகு அதில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ELSS Mutual Funds
ELSS என்பது Equity Linked Savings Scheme என்பதாகும். அதாவது ஷேர் மார்க்கெட்டில் செயல்படும் ஒரு சேமிப்பு திட்டம் தான். பங்கு சந்தையில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளது, அதில் ஒரு வழி தான் இந்த ELSS என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.
சரி ELSS எப்படி செயல்படுகிறது?
ELSS Mutual Funds பற்றி அறியும் முன்பும் நாம் Equity Funds குறித்து தெரிந்துகொள்ளவேண்டும். Equity Funds என்பது வேறொன்றுமல்ல, பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதை இயல்பாக கொண்ட Funds தான் Equity என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒருவர் ஷேர் மார்க்கெட்டில் பங்குகளை வாங்கும்போது, சிறு சிறு நிறுவனங்களின் குறைந்த விலை கொண்டு பங்குகளை தான் வாங்குவார்கள். ஆனால் Equity Funds என்பது பெரிய பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, பெரிய அளவில் லாபம் பெரும் ஒரு வழியாகும்.
இந்த Equity Fundsகளை சார்ந்து செயல்படும் சேமிப்பு திட்டம் தான் ELSS. முன்பே கூறியதை போல நீங்கள் மார்க்கெட் குறித்து நன்றாக அறிந்த பின்னரே இந்த வகை திட்டங்களில் இணைய முடியும் (அதுதான் நல்லது). அல்லது SEBIயால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபரை வைத்து இந்த வகை திட்டங்களில் பணத்தை சேமிப்பது நல்லது. குறைந்த காலத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு மட்டுமே இது சிறந்தது. காரணம் 3 முதல் 5 ஆண்டுகளில் முதிர்வடைந்து லாபம் பெரும் வண்ணம் தான் இந்த ELSS செயல்படுகிறது.
எப்படி ELSS திட்டத்தில் இணைவது?
ஷேர் மார்க்கெட்டை பொறுத்தவரை கட்டாயம் உங்களிடம் ஒரு டிமாண்ட் கணக்கு இருக்க வேண்டும். இணைய வழி செயலிகள் மூலமாகவோ, அல்லது வங்கிகள் மூலமாகவோ இந்த டிமாண்ட் கணக்கை துவங்க முடியும். அதன் பிறகு நீங்கள் ELSS திட்டத்தில் சேர, சிறந்த பெரிய நிறுவனங்கள் எது? அந்த நிறுவனத்தின் கடந்த 5 ஆண்டு வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி எப்படி உள்ளது? என்பது போன்ற பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.
ELSS தரும் நன்மைகள்
குறுகிய காலத்தில் மட்டுமல்ல, சில பல ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும் என்றால் சில நூறு ரூபாயை கூட இந்த திட்டத்தில் போட்டு உங்களால் சேமிப்பை துவங்க முடியும். SIP திட்டம் போல, LUMPSUM முறையிலும் இதில் பணத்தை சேமிக்கலாம். மேலும் 1.5 லட்சம் வரை வரி சலுகைகளும் இதில் கிடைக்கிறது. குறைந்தது 3 ஆண்டுகள் சேமித்து, அதன்பிறகு இந்த திட்டத்தில் இருந்து உங்களால் விளக்கிக்கொள்ளவும் முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்